சிறுநீரை குடிக்க வைத்து மனைவியை கொடுமைப்படுத்திய கணவன் கைது!
பெங்களூர்: மனைவியை அடித்து உதைத்து சிறுநீரை குடிக்க வைத்து கொடுமைப்படுத்தி வந்த கணவன் மீது போலீஸில் புகார் கொடுத்துள்ளார் அந்தப் பரிதாபத்துக்குரிய பெண். இந்தக் கொடுமையைச் செய்தவர் ஒரு பல் டாக்டர் என்பதுதான் கொடுமையானது.
உடுப்பி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆகாஷ். இவர் ஒரு பல் டாக்டர். இவருக்கும் ஷப்னாவிற்கும் கடந்த 11 மாதத்திற்கு முன்பு திருமணமானது. ஆனால் போகப் போக இருவருக்கும் ஒத்துவரவில்லை. மோதல் மூண்டது. இதையடுத்து 2 மாதங்களுக்கு முன்பு இருவரும் பிரிந்து விட்டனர். ஷப்னா பெங்களூரில் உள்ள தனது அண்ணன் வீட்டில் தங்கியிருக்கிறார்.
இந்த நிலையில் பெங்களூர் பல்கலைக்கழக ஞானபாரதி காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார் ஷப்னா. அதில், எனது கணவர் என்னிடம் வரதட்சணை கேட்டு கொடுமை செய்து வந்தார். செக்ஸ் ரீதியாகவும் சித்ரவதை செய்தார்.
அத்துடன் எனது சிறுநீரை என்னையே குடிக்க வைத்து கொடுமை செய்தார். எனவே அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஷப்னா. இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். ஆகாஷையும் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications