குடியரசுத் தலைவர் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக திரிணாமுல் காங்கிரஸ் அறிவிப்பு
கொல்கத்தா: குடியரசுத் தலைவர் தேர்தல் மற்றும் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் ஆகியவற்றை புறக்கணிக்கப் போவதாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் 19-ந் தேதியும் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 7-ந் தேதியும் நடைபெற உள்ளது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் சார்பில் பிரணாப் முகர்ஜியும் எதிர்க்கட்சிகளின் சார்பில் பி.ஏ.சங்மாவும் களத்தில் உள்ளனர். குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் ஹமீத் அன்சாரியும் ஜஸ்வந்த்சிங்கும் மோதுகின்றனர்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்தாலும் பிரணாப் முகர்ஜியை திரிணாமுல் காங்கிரஸ் ஏற்கவில்லை. அப்துல்கலாமை முன்னிறுத்தப் பார்த்தது. முயற்சி கைகூடவில்லை. அதேபோல் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் காந்தியின் பேரனான கோபாலகிருஷ்ண காந்தியை நிறுத்தப் பார்த்தது. அதுவும் நடைபெறவில்லை.
இதனால் குடியரசுத் தலைவர் தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பதை அக்கட்சி அறிவிக்காமல் இருந்து வந்தது. மேலும் வாக்குப் பதிவுக்கு 72 மணி நேரத்துக்கு முன்பு அறிவிப்பதாகவும் கூறியிருந்தது. இந்நிலையில் குடியரசுத் தலைவர் தேர்தல் மற்றும் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் ஆகியவற்றைப் புறக்கணிப்பதாக அக்கட்சி இன்று அறிவித்துள்ளது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications