மும்பை தாக்குதல் தொடர்பாக இந்தியாவுக்கு விசாரணைக் கமிஷனால் பயன் ஏதுமில்லை: பாகிஸ்தான் நீதிமன்றம்
டெல்லி: மும்பை தாக்குதல் தொடர்பாக இந்தியாவுக்கு வந்து சென்ற பாகிஸ்தானின் விசாரணைக் கமிஷனால் எந்த பயனும் இல்லை என்று அந்நாட்டு பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் கூறியிருக்கிறது. மும்பை தாக்குதலில் தொடர்புடைய கசாப் போன்றோரிடம் விசாரணை நடத்தாததால் அந்த விசாரணைக் கமிஷனின் அறிக்கை சட்டப்பூர்வமானதாக இல்லை என்றும் அந்நீதிமன்றம் கூறியுள்ளது.
2008-ம் ஆண்டு மும்பையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக லஷ்கர் இ தொய்பாவின் கமாண்டர் லக்வி உள்ளிட்ட 7 பேர் மீது பாகிஸ்தானின் பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையின் போது நீதிபதி ரியாஸ் அக்ரம் சீமா, கசாப்பிடம் விசாரணை நடத்த இந்தியா அனுமதிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் புதிய விசாரணைக் கமிஷன் ஒன்று இந்தியாவுக்கு சென்று முக்கிய சாட்சிகளிடம் மீண்டும் விசாரணை நடத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
இந்த விவகாரம் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உறவில் மீண்டும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கருத்துத் தெரித்த உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங், பாகிஸ்தானின் விசாரணை ஆணையம் சேகரித்த தகவல்கள் சட்டப்பூர்வமானது என்றே கருதுகிறோம். இருப்பினும் நீதிபதியின் தீர்ப்பை முழுமையாக அறிந்த பிறகு பாகிஸ்தானிடம் அது குறித்து விளக்கம் கேட்போம் என்றார்.












Click it and Unblock the Notifications