பாஜக மீனவர் அணி மாநில துணைத் தலைவர் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை
குமரி: பாஜக மீனவர் அணி மாநில துணைத் தலைவர் யூஜின் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குமரி மாவட்டம் மார்த்தாண்டம் ஆர்.சி. தெருவைச் சேர்ந்தவர் யூஜின்(37). பாஜக மீனவரணி மாநில துணைத் தலைவர். அவரது மனைவி சைனி. அவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த சில நாட்களாக யூஜின் மிகுந்த மனக்குழப்பத்தில் இருந்ததாகக் கூறப்படுகின்றது.
இந்நிலையில் குழித்துறை ரயில் நிலையம் அருகே பள்ளன்விளை ரயில் தண்டாவளத்தில் ஷாலிமார் விரைவுத் தொடர்வண்டி முன்பு பாய்ந்து யூஜின் தற்கொலை செய்து கொண்டார். அவரது கை, கால்கள் துண்டான நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தது. சிறிது தூரத்தில் யூஜினின் பைக் மட்டும் தனியாக நின்றது.
இது பற்றித் தகவல் அறிந்த இருப்புப்பாதை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று யூஜின் உடலை கைப்பற்றிக் குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தற்கொலைக்கான காரணம் பற்றி விசாரணை நடத்தி வருகிறார்.
கடந்த 2006ல் குழித்துறை நகராட்சி துணைத் தலைவராக யூஜன் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications