இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்ற 23 மீனவர்களுக்கும் 15 நாள் சிறை!

தமிழக மீனவர்களை சுற்றி வளைத்த இலங்கை மீனவர்கள், தமிழக மீனவர்களின் படகுகளை தாக்கி சேதப்படுத்தி அவர்களை நிலை குலைய வைத்து பின்னர் இலங்கைக் கடற்படையிடம் ஒப்படைத்துள்ளனர். கச்சத்தீவு அருகே இந்த அக்கிரமம் நேற்று நடந்துள்ளது.
மீனவர்கள் தவிர தமிழக மீனவர்களின் 5 படகுகளையும் இலங்கையர்கள் பிடித்துச் சென்றுள்ளனர். இன்று அவர்களை மன்னார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மீனவர்களை 15 நாள் காவலில் வைக்க மன்னார் கோர்ட் உத்தரவிட்டது.
இதுகுறித்து ராமேஸ்வரம் மீனவர்கள் சங்கத் தலைவர் எமிரெட் கூறுகையில், தமிழக மீனவர்களுக்குச் சொந்தமான 20 படகுகளை இலங்கைக் கடற்படையினர் தாக்கி சேதப்படுத்தியுள்ளனர். மீன்பிடி வலைகளையும் கிழித்தெறிந்து விட்டனர் என்றார் குமுறலுடன்.
இந்தியாவின் அடுத்த குடியரசுத் தலைவராக பிரணாப் முகர்ஜி வெற்றி பெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் இலங்கைக் கடற்படையும், அந்த நாட்டு மீனவர்களும் கூட்டாக சேர்ந்து நடத்திய இந்த அக்கிரமச் செயலால் ராமேஸ்வரம் மீனவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
காலவரையற்ற ஸ்டிரைக்
இலங்கையில் சிறை வைக்கப்பட்டுள்ள 23 மீனவர்களையும் விடுவிக்கக் கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமேஸ்வரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த சுமார் 700 படகுகள் இன்று கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. இதனால் ராமேஸ்வரத்தில் மீண்டும் மீனவர்கள் பிரச்சனை வெடித்துள்ளது.












Click it and Unblock the Notifications