நாடாளுமன்றத் தேர்தலிலும் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும்: கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

Karunanidhi
சென்னை: வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும் என்று திமுக தலைவர் கருணாநிதி நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.

அவர் அளித்த பேட்டியில்,

கேள்வி: ஜனாதிபதி தேர்தலில் வென்ற பிரணாப் முகர்ஜி உங்களிடம் பேசினாரா?

பதில்: ஆமாம், தொலைபேசி வாயிலாக என்னுடன் தொடர்பு கொண்டு இதயமார்ந்த நன்றியினை தெரிவித்தார். நான் அவருக்கு கழகத்தின் சார்பில் இந்த தேர்தலில் அவர் பெற்ற மகத்தான வெற்றிக்காக வாழ்த்து தெரிவித்தேன்.

கேள்வி: ஜனாதிபதி பதவியேற்பு விழா நிகழ்ச்சியில் நீங்கள் கலந்து கொள்வீர்களா?

பதில்: அந்த நிகழ்ச்சியில் தி.மு.க. சார்பாக நாடாளுமன்ற கழக குழு தலைவரான டி.ஆர்.பாலுவும், மற்ற தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்வார்கள்.

கேள்வி: பேரறிவாளன் உள்ளிட்ட மூன்று பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி புதிய ஜனாதிபதியிடம் நீங்கள் வலியுறுத்துவீர்களா?

பதில்: நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். பொதுவாகவே தூக்கு தண்டனையே கூடாது என்பது தான் என்னுடைய கருத்து. பேரறிவாளன் உள்ளிட்ட மூன்று பேர் தூக்கு தண்டனை பற்றியும் ஏற்கனவே தி.மு.க. சார்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது.

கேள்வி: பிரணாப் முகர்ஜிக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் வாக்குகளைத் தவிர தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்தும் வாக்குகள் கிடைத்திருக்கிறதே?

பதில்: பிரணாப் முகர்ஜி சிறந்த ஜனநாயகவாதி. நல்ல நிர்வாகி. அவர் மீது கொண்டுள்ள நம்பிக்கையின் காரணமாக அவருக்கு அதிக வாக்குகள் கிடைத்திருக்கிறது.

கேள்வி: 2014-ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலிலும் இதே வெற்றி தொடரும் என்று நம்புகிறீர்களா?

பதில்: ஆம், நிச்சயமாக நம்புகிறேன் என்றார் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+