குளிப்பதைப் படம் எடுத்து.. பலமுறை கெடுத்து.. இளம் பெண் தற்கொலை!
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே 22 வயதான இளம் பெண் குளிப்பதை ஒரு கும்பல் ரகசியமாக படம் பிடித்து வைத்துக் கொண்டு அதைக் காட்டி பலமுறை அவருடன் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளது. ஒரு கட்டத்தில் இந்தக் கும்பலின் வெறிச்செயல் அதிகரிக்கவே அப்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலைக்கு முன்பு அவர் எழுதி வைத்த கடிதத்தில் யாரெல்லாம் தன்னை நாசப்படுத்தினார்கள் என்பதையும் விரிவாக எழுதி வைத்திருந்ததால் அதன் உதவியோடு 3 பேரை கைது செய்துள்ளனர் போலீஸார்.
செங்கம் அருகே உள்ளது மண்மலை கிராமம். இக்கிராமத்தைச் சேர்ந்த 22 வயது ஆனந்தி பாலிடெக்னிக்கில் படித்து வந்தார். கடந்த 23ம் தேதி இவர் தனது வீட்டில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். சாவதற்கு முன்பு ஒரு கடிதத்தை அவர் எழுதி வைத்திருந்தார்.
அதைக் கைப்பற்றிய போலீஸார் அதைப் படித்துப் பார்த்தனர். அதில் ஆனந்தி அதிர்ச்சிகரமான தகவலைத் தெரிவித்திருந்தார்.
நான் குளிக்கும்போது செல்போனில் வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு என்னை இதே ஊரில் உள்ள வினோத்குமார், ஜெகன் உள்பட சிலர் என்னை மிரட்டினர். என்னை தங்கள் இச்சைக்கு பயன்படுத்திக்கொண்டனர். தினமும்
ஒவ்வொருவராக வந்து என்னை பயன்படுத்திக்கொண்டனர்.
நாங்கள் சொல்லும்போதெல்லாம், எங்களுடன் வரவேண்டும். இல்லையேல் குளியல் வீடியோவை இன்டெர்நெட்டில் வெளியிடுவோம் என்று மிரட்டினார்கள். இதற்கு பயந்து அவர்கள் சொன்னதையெல்லாம் செய்தேன்.
ஆனால் தற்போது அதிகமாக தொந்தரவு செய்து வேறு சிலரையும் அழைத்து வந்து, அவர்களுடனும் இருக்குமாறு கட்டாயப்படுத்தினார்கள். இதனால் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறேன் என்று விரிவாக எழுதி வைத்திருந்தார். இதையடுத்து விசாரணையில் குதித்த போலீஸார் 3 பேரைக் கைது செய்துள்ளனர். மற்றவர்களையும் பிடிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications