For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருகோணமலை அருகே அணுமின் நிலையம் அமைக்க உதவுகிறது பாகிஸ்தான்

By Mathi
Google Oneindia Tamil News

திருகோணமலை: இலங்கையின் கிழக்கில் தமிழர்கள் வாழும் திருகோணமலை பிரதேசம் சம்பூரில் இந்தியா அனல் மின் நிலையம் அமைக்கத் திட்டமிட்டிருந்தது. ஆனால் தற்போது சம்பூரில் அணுமின் நிலையம் அமைப்பது தொடர்பாக இலங்கையுடன் பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடத்தத் தொடங்கியுள்ளது டெல்லியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கொழும்பில் உள்ள இந்திய தூதர் அசோக் காந்தா கடந்த வாரம் டெல்லி சென்று இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான உறவு வலுவடைந்து வருவதை சுட்டிக்காட்டி விளக்கியிருக்கிறார். பாகிஸ்தானுடன் பாதுகாப்பு உறவை வலுப்படுத்தவும் இலங்கை முயற்சித்து வருவதாகவும் கூறப்படுகிறது. டி -55 ரக டாங்கிகளின் இயந்திரங்களை சீரமைக்கவும் ராணுவ தளவாடங்களை நவீனமயமாக்குவது குறித்தும் இலங்கையும் பாகிஸ்தானும் விவாதித்து வருகிறது.

இதுவரை மறைமுகமாக உதவி வந்த பாகிஸ்தான் சீனாவின் உதவியுடன் பகிரங்கமாக இலங்கையில் காலூன்றத் தொடங்கியிருக்கிறது.

தமிழ்நாட்டில் இலங்கைக்கு எதிரான எத்தனை அழுத்தங்கள் கொடுத்தாலும் எப்போதும் நட்பு நாடு என்று பாராட்டும் மத்திய அரசுக்கு இப்பொழுது தலையிடியாக இது இருக்கக் கூடும் என்றே கூறப்படுகிறது

English summary
Pakistan is all set to begin consultations with Sri Lanka to help set up a nuclear power plant in Trincomallee's Sampur, it is believed.The development is being viewed with concern in New Delhi since the Indian embassy in Colombo reported the development to South Block.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X