மீண்டும் பரிதாபம்-சென்னையில் ஸ்கூல் வேனில் சிக்கி ஒன்றரை வயது குழந்தை பலி
சென்னை: பள்ளிப் பேருந்தில் இருந்த ஓட்டை வழியாக கீழே விழுந்த 2ம் வகுப்பு மாணவி ஸ்ருதி பலியானதால் ஏற்பட்ட பரபரப்பே இன்னும் அடங்காத நிலையில் திருமுல்லைவாயலில் ஒன்றரை வயது ஆண் குழந்தை பள்ளி வேனில் சிக்கி பலியானது.
சென்னையில் உள்ள ஜியோன் பள்ளி பேருந்தில் இருந்த ஓட்டை வழியாக விழுந்த 2ம் வகுப்பு மாணவி ஸ்ருதி பலியானார். இதைத் தொடர்ந்து வேலூர், சிதம்பரம் ஆகிய பகுதிகளிலும் பள்ளி வாகனத்தில் அடிபட்டு 2 மாணவிகள் பரிதாபமாக இறந்தார்கள். இந்நிலையில் சென்னையை அடுத்த திருமுல்லைவாயலில் ஒன்றரை வயது ஆண் குழந்தை பள்ளி வேனில் சிக்கி பலியானது.
திருமுல்லைவாயல் அன்னனூர் பிள்ளையார் கோவில் தெருவில் வசிப்பவர் ஆனந்தன். அப்பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். அவரது மனைவி மீனா. அவர்களின் குழந்தைகள் சந்தோஷ் (6), சுதாகர் (3 1/2), சஞ்சய் (1 1/2). அதில் சந்தோஷும், சுதாகரும் அரும்பாக்கம் லிட்டில் ஏஞ்சல் மெட்ரிகுலேஷன் பள்ளியில் படிக்கின்றனர்.
இத்தனை நாட்களாக அவர்கள் இருவரும் தங்கள் தந்தையுடன் பைக்கில் பள்ளிக்கு சென்று வந்தனர். இந்நிலையில் அவர்களை பள்ளி வேனில் அனுப்ப அவர்களின் பெற்றோர் முடிவு செய்தனர். இன்று முதன் முதலாக பள்ளி வேனில் அவர்களை அனுப்பி வைக்க இருந்தனர். காலை 8 மணிக்கு வேன் வந்தது. அப்போது மீனா சஞ்சயை கீழே இறக்கிவிட்டுவிட்டு மற்ற 2 மகன்களையும் வேனில் ஏற்றினார்.
வேனும் கிளம்பியது. இதற்கிடையே குழந்தை சஞ்சய் தவழ்ந்து வேனுக்கு அடியில் சென்றதை யாரும் கவனிக்கவில்லை. டிரைவர் வேனை எடுத்ததும் குழந்தை பின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானான். இதைப் பார்த்த மீனா கதறினார். உடனே வேன் டிரைவர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்தவர்கள் ஓடி வந்து வேனில் இருந்த குழந்தைகளை கீழே இறக்கிவிட்டு வேனை நொறுக்கினர்.
இது குறித்து தகவல் அறிந்த ஆவடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கூடியிருந்தவர்களை போலீசார் சமாதானப்படுத்தினர். நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications