கும்பகோணம் பள்ளி தீவிபத்து: 6 மாதத்திற்குள் விசாரணையை முடிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு
டெல்லி: கும்பகோணத்தில் 94 பள்ளி குழந்தைகள் உயிரிழக்க காரணமாக இருந்த தீவிபத்து வழக்கு விசாரணையை, ஆறு மாதத்திற்குள் நடத்தி முடிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2004ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் தேதி கும்பகோணத்தில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா என்ற தனியார் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 94 பிஞ்சு குழந்தைகள் உடல் கருகி பலியானர்கள். 8 ஆண்டுகளாக நடந்து வரும் இந்த வழக்கில் 25 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் வட்டாச்சியர், மாவட்ட கல்வித்துறை அதிகாரி உள்பட 7 பேர் இந்த வழக்கில் இருந்து சென்னை உயர் நீதிமன்றம் விடுவித்தது.
இந்த நிலையில், வழக்கில் இருந்து தன்னை விடுக்க வேண்டும் என்று முன்னாள் தொடக்க கல்வித்துறை அதிகாரி பாலகிருஷ்ணனின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் பாலகிருஷ்ணன் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி கபாடியா கொண்ட அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறிய நீதிபதிகள் கல்வி அதிகாரியான பாலகிருஷ்ணன் வழக்கினை எதிர்கொள்ளவேண்டும் என்று கூறி அவரது மனுவை தள்ளுபடி செய்தனர். 8 ஆண்டுகளாக இழுத்துக்கொண்டிருக்கும் வழக்கை 6 மாதத்தில் முடிக்க தஞ்சாவூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்
உச்சநீதிமன்றத்தின் இந்த அதிரடி உத்தரவினால் வழக்கு விரைந்து முடிவுக்கு வந்து குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications