முத்துமாரியம்மனின் மூக்குத்தி, தாலி, தோடு அபேஸ்!
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வயலோகம் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் உள்ள அம்மன் கழுத்தில் கிடந்த தாலி, மூக்குத்தி, கம்மல் உள்ளிட்ட நகைகளை திருடர்கள் திருடிச் சென்றதால் கிராமமே பரபரப்பாகியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அடுத்த வயலோகம் கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலுக்குப் பக்தர்கள் காணிக்கையாக, நன்கொடையாக வழங்கிய பணத்தின் மூலம் அம்மனுக்கு வைரக்கல் பதிக்கப்பட்ட 5 பவுன் டாலர் செயின், 3 பவுன் தாலிச் செயின், தோடு, பொட்டு, மூக்குத்தி போன்றவை வாங்கப்பட்டுள்ளது.
திருவிழா, பெளர்ணமி விழா மற்றும் ஆடி வெள்ளி போன்ற முக்கிய நாட்களில் அம்மனுக்கு அணிவிப்பது வழக்கம். கடந்த 3ம் தேதி ஆடி வெள்ளி என்பதால் அம்மனுக்கு நகைகள் அனைத்தும் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடந்தது. இரவு எட்டு மணிக்கு மேல் நடையை சாத்திவிட்டு கோவில் குருக்கள் வீடு திரும்பியுள்ளார்.
கோவில் வெளியே காவலாளி கருப்பையா வழக்கம்போல் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவில் உண்டியலை உடைக்கும் சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து விழித்த கருப்பையா, திருடன் திருடன் என்று கத்தியுள்ளார்.
இதையடுத்து அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர். அப்போது கருவறை பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து அதிர்ந்து உள்ளே போய்ப் பார்த்தனர். அங்கு அம்மன் கழுத்தில் கிடந்த செயின், தாலிச் சங்கிலி, தோடு, பொட்டு, மூக்குத்தி ஆகியவை திருடு போயிருந்தன.
இதையடுத்து கோவில் நிர்வாகம் சார்பில் போலீஸில் புகார் தரப்பட்டது. அதன் பேரில் போலீஸார் மோப்ப நாய்கள் சகிதம் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
அம்மனின் தாலி, மூக்குத்தி உள்ளிட்டவை திருடு போனதால் வயலோகம் கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications