ஐகோர்ட்டில் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த 3 நீதிபதிகளை நியமிக்க வேண்டும்: ராமதாஸ்

அவரது அறிக்கையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள 60 நீதிபதிகள் பணியிடங்களில் 8 இடங்கள் காலியாக உள்ளன. மேலும் இரு நீதிபதிகள் விரைவில் ஓய்வு பெற இருப்பதால், அதனால் ஏற்படும் காலி இடங்களையும் சேர்த்து நிரப்புவதற்காக தகுதியுடைய 10 பேரின் பட்டியல் உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பட இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
தமிழக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு அளவிற்கு வன்னியர்கள் உள்ளனர். மக்கள் தொகை அடிப்படையில் பார்த்தால் சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு, அதாவது 20 இடங்கள் வன்னியர்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்போதுள்ள நீதிபதிகளில் ஒரே ஒருவர் மட்டுமே வன்னியர் ஆவார். தமிழ்நாட்டில் எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் அந்த கட்சிக்கு ஆதரவான வழக்குறைஞர்கள் மட்டுமே உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாகவே எழுப்பப்பட்டு வருகிறது.
நீதிபதிகள் நியமனத்தில் சமுதாயத்தின் அனைத்து பிரிவினருக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும்.
இதற்கு வசதியாக நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீட்டு முறையை அறிமுகம் செய்ய வேண்டும். அதற்கு முன்பாக சென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிதாக 10 நீதிபதிகளை தேர்வு செய்யும்போது வன்னிய சமுதாயத்தை சேர்ந்த 3 பேருக்காவது வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.
-
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications