டெசோ மாநாட்டுக்கு அனுமதி மறுப்பு- நள்ளிரவில் முடிவெடுத்த போலீசார்!
Subscribe to Oneindia Tamil

சென்னையில் தமிழக டிஜிபி ராமானுஜத்துடன் சென்னை காவல்துறை ஆணையர் திரிபாதி, கூடுதல் ஆணையர் தாமரைக் கண்ணன் ஆகியோர் வெள்ளிக்கிழமை இரவு பல மணிநேரம் ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனைக்குப் பின்னர் டெசோ மாநாட்டுக்கு அனுமதி தருவதில்லை என்று முடிவெடுக்கப்பட்டது. இதற்கு 11 காரணங்களையும் சென்னை பெருநகர காவல்துறை கூறியுள்ளது. எப்படியும் டெசோ மாநாட்டுக்கு 1 லட்சம் பேர் வருகை தருவார்கள் என்றும் மெட்ரோ ரயில் பணிகளால் ஏற்கெனவே நெரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் கூடுதல் சிரமம் ஏற்படும் என்பது உள்ளிட்ட காரணங்கள் அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவை வெள்ளிக்கிழமை நள்ளிரவு தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகனிடம் சென்னை போலீசார் கொடுத்தனர்.












Click it and Unblock the Notifications