ரோட்டில் ஆசிரியையின் 8 பவுன் செயினும், ரயிலில் பெண் எஸ்.ஐ.-ன் 9 பவுன் செயினும் பறிப்பு
சேலம்: சேலத்தில் பள்ளி ஆசிரியை மற்றும் பெண் எஸ்.ஐ.யின் கழுத்தில் கிடந்த தங்க செயின்கள் பறிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்தவர் நிர்மலா. புங்கன்வாடி பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். அவர் இன்று காலை தனது இரு சக்கர வாகனத்தில் பள்ளிக்கு கிளம்பினார். அவர் ஆத்தூரை அடுத்து உள்ள மஞ்சினி பாலம் அருகே சென்று கொண்டிருக்கையில் அந்த வழியாக ஒரு பைக் வந்தது. அதில் ஹெல்மெட் அணிந்த இருவர் இருந்தனர். அவர்கள் திடீர் என்று நிர்மலாவின் கழுத்தில் இருந்த 8 பவுன் செயினைப் பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிவிட்டனர்.
ஆவடி பட்டாலியனைச் சேர்ந்தவர் சப் இன்ஸ்பெக்டர் உஷா நந்தினி. அவர் இன்று காலை ஏற்காடு எக்ஸ்பிரஸில் சேலத்திற்கு வந்தார். ரயில் மொரப்பூர் அருகே சென்று கொண்டிருந்தபோது ஜன்னல் சீட்டில் உட்கார்ந்திருந்த உஷா நந்தினியின் கழுத்தில் கிடந்த 9 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு ஒருவர் தப்பியோடிவிட்டார். இது குறித்து அவர் சேலம் ரயில்வே போலீசில் புகார் கொடுத்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications