நெல்லை மாவட்டத்தில் 10 தாசில்தார்கள் திடீர் இடமாற்றம்: கலெக்டர் உத்தரவு
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் 10 தாசில்தார்கள் திடீர் என்று இடம்மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். செங்கோட்டைக்கு புது தாசில்தார் நியமிக்கப்பட்டுள்ளார். 4 பேருக்கு பதிவு உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் வருவாய்த் துறையில் இருந்த 10 தாசில்தார்கள் திடீர் என்று மாற்றப்பட்டுள்ளனர். இது குறித்த விபரம் வருமாறு,
ராதாபுரம சமூக பாதுகாப்புத் தி்ட்ட தாசில்தார் புகாரி நெல்லை அரசு கேபிள் டிவி நிறுவன தனி தாசில்தாராகவும், விகே புதூர் சமூக பாதுகாப்புத் திட்ட தாசில்தார் சுதந்தரம் செங்கோட்டை சமூக பாதுகாப்புத் திட்ட தாசில்தாராகவும், செங்கோட்டை தாசில்தார் தங்கவேல் நெல்லை கோட்ட கலால் அலுவலராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
விகேபுதூர் தாசில்தார் சுமங்கலி ஆலங்குளம் சமூக திட்ட பாதுகாப்பு தாசில்தாராகவும், நெல்லை டாஸ்மாக் கிட்டங்கி மேலாளர் விஜயா வள்ளியூர் தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு தனி தாசில்தாராகவும், இங்கு பணியாற்றிய ரதி என்ற லெட்சுமி நெல்லை டாஸ்மாக் கிட்டங்கி மேலாளராகவும், சிவகிரி சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் மாரிமுத்து சிவகரி குடிமை பொருள் வழங்கல் தனி தாசில்தாராகவும் மாற்றப்பட்டுள்ளனர். நாங்குநேரி ஆதி திராவிடர் நல தனி தாசில்தார் குருசந்திரன் விகேபுதூர் தாசில்தாராகவும், நெல்லை மாவட்ட பிற்பட்டோர் நலத்துறை அலுவலக தனி தாசில்தார் நில எடுப்பு வரதராஜன் நாங்குநேரி தாசில்தாராகவும், நாங்குநேரி தாசில்தார் கிருஷ்ணவேனி செங்கோட்டை தாசில்தாராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications