100 பாட்டில் பீர் அடித்து 'மட்டையான' பியர்கள்!

நார்வேயைச் சேர்ந்தவர் இவன் பார்தன் நில்சன். தொழில் அதிபர். அவர் விடுமுறையைக் கழிக்க தனது குடும்பத்துடன் நகர எல்லையில் உள்ள வீட்டுக்கு சென்றார். அங்கு அவர்கள் சுற்றிப் பார்க்க வெளியே சென்றுவிட்டனர். அப்போது பெண் கரடி ஒன்று தனது 3 குட்டிகளுடன் அந்த வழியாக வந்தது வீட்டின் ஜன்னல் ஒன்று திறந்திருப்பதைப் பார்த்து அதன் வழியாக உள்ளே நுழைந்தது.
இவன் வாங்கி வைத்திருந்த உணவுப் பொருட்களை சாப்பிட்டதுடன் வீட்டில் இருந்த 100 கேன் பீரையும் குடித்து முடித்தன. மேலும் சமையல் அறையில் இருந்த அடுப்பு, மைக்ரோ வேவ் அவன் உள்ளிட்ட பொருட்களை நொறுக்கிவிட்டு, மெத்தைகளை கிழித்தெறிந்து, வீட்டின் சுவரையும் இடித்து தள்ளிவிட்டுச் சென்றன. வீடு திரும்பிய இவன் மற்றும் குடும்பத்தார் இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
வீட்டுக்குள் சென்று பார்த்தபோது கரடிகள் வந்து சென்றதற்கான அடையாளங்கள் இருந்தன. விடுமுறையைக் கழிக்க வந்த இடத்தில் கரடிகள் அவர்களின் சந்தோஷத்தை கெடுத்துவிட்டுச் சென்றுள்ளன.












Click it and Unblock the Notifications