அனல் மின் நிலைய தீ விபத்து: நிர்க்கதியான ஊழியர் குடும்பங்கள்
தூத்துக்குடி: புதிய புத்தூர் அருகேயுள்ள கீழவேலாயபுரம் தனியார் அனல் மி்ன் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியான தொழிலாளர்கள் குறித்து உருக்கமான தகவல் கிடைத்துள்ளது.
அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் தூத்துக்குடி அருகே உள்ள கோராம்பள்ளம் சோரீஸ்புரத்தைச் சேர்ந்த மால்ராஜ் பலியானார். அவரது மனைவி கமலாதேவி. அவர்களுக்கு அன்ன மகாராணி, சோபியா என்ற மகள்களும், அன்ன மகாராஜா என்ற மகனும் உள்ளனர். கமலாதேவி கோராம்பள்ளத்தில் மக்கள் நல பணியாளராக பணியாற்றி வேலை இழந்தவர். மகள் அன்ன மகாராணி ஆசிரியர் பயிற்சி முடித்துள்ளார். அன்ன மகராஜா என்ஜினியரிங் முடித்து ஐஏஎஸ் பயிற்சிக்கு தயாராகி வருகிறார். சோபியா பிளஸ் டூ முடித்துள்ளார். வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த மால்ராஜ் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் சொந்த ஊர் திரும்பினார். அதன்பிறகு அனல் மின் நிலையத்தில் வேலை பார்த்து வந்தார்.
நேற்று அனல் மின் நிலையத்தில் பாய்லருக்கு நிலக்கரி கொண்டு செல்லும் கிரஷர் யூனிட்டின் கீழ் பகுதியில் அவர் வேலை பார்த்தார். கன்வேயர் பெல்ட்டில் தீ ஏற்பட்டதும் அதை அணைப்பதற்கு அவர் மேல் பகுதிக்கு சென்றுள்ளார். புகை மூட்டம் சூழவே உயிரை காப்பாற்றிக் கொள்ள மேல் இருந்து கீழே குதித்ததில் இறந்தார். அவரின் வருமானத்தை வைத்துதான் ஒட்டுமொத்த குடும்பமும் வாழ்ந்து வந்துள்ளது. அவர்களின் வாழ்க்கை தற்போது கேள்விக்குறியாகிவிட்டது.
இதே போன்று பாஞ்சாலங்குறிச்சி சிலோன் காலனியைச் சேர்ந்த மனோகரன் மகன் சக்தி என்ற சத்தியமூர்த்தியும் தீ விபத்தில் பலியானார். அவரது மனைவி பெயர் ஜானகி. அவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். மிகவும் வறுமையில் வாடிய நிலையில் அவர் தீ விபத்தில் இறந்ததால் தற்போது அவரது குடும்பமும் நிர்க்கதியாகிவிட்டது. தீ விபத்தில் பலியான கழுகுமலையை சேர்ந்த லவக்குமாரின் தந்தை பெயர் காளிதாஸ். லவக்குமார் தவிர அவருக்கு ஒரு மகள் உள்ளார். கூலி வேலை செய்து வரும் காளிதாஸ் குடும்ப வறுமையை பொருட்படுத்தாமல் மகனை ஐடிஐ படிக்க வைத்தார். பிட்டர் பயிற்சி முடித்த லவக்குமார் கோவில்பட்டியில் உள்ள தனியார் நூற்பாலையில் அப்ரன்டீஸ் பயிற்சி பெற்றார். பின்னர் ஃபயர் சேப்டி மேனேஜ்மென்ட் பயிற்சி முடித்தார்.
சமீபத்தில் தான் அவர் புதியம்புத்தூர் அருகே உள்ள அனல் மின் நிலையத்தில் வேலைக்கு சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications