மாமூல் கிடைக்கலைன்னா கண்மூடித்தனமா அடிப்பீங்களோ? நாங்களும் திருப்பி அடிப்போம்ல...
திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மாமூல் வாங்க சென்ற போலீசாரை பொதுமக்கள் நையப் புடைத்து பாடம் புகட்டி உள்ளனர்.
திருப்புவனம் அருகே உள்ள கலியாந்தூர் கிராமத்தைச் சேர்ந்த சிலர் டாஸ்மாக் மது பார்களில் பணிபுரிகின்றவர்கள். இவர்களிடம் மாமூல் வாங்குவதையே மாமூலாக வைத்திருக்கின்றனர் திருப்புவனம் போலீசார். இவர்களில் மதுவிலக்கு பிரிவு போலீசாரான அய்யப்பனும் தனபாலனும் டூ வீலரில் வேட்டைக்கு கிளம்பினர். போகும் வழியில் போலீசாரின் டூ வீலர் மீது பின்னாள் வந்த வாழை இலைவேன் மோதிவிட்டது. அவ்வளவுதான்! இரண்டு வசூல் ராஜாக்களும் அந்த வேன் டிரைவர் அங்குச்சாமியை அங்குலம் அங்குலமாக பிய்த்து மேய்ந்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு திரண்ட பொதுமக்கள் போலீசாரை சமாதானப்படுத்திப் பார்த்தனர்.
ஆனாலும் சமாதானமாக போலீசார் முரண்டு பிடித்துக் கொண்டிருக்க இப்பொழுது பொதுமக்களுக்கு கோபம் எகிறிவிட்டது. வந்ததே மாமூல் வாங்க... மாமூல் கிடைக்கலைங்கிற ஆத்திரத்துல கண்மூடித்தனமான போகிற வருகிறவங்களையெல்லாம் அடிக்கிறதே வழக்கமா? என எதிர்த்துக் கேள்வி கேட்டதுடன் விடவில்லை. இரண்டு போலீசாரையும் பொளந்து கட்டி நையப் புடைத்து பாடம் கற்பித்துள்ளனர்.
தகவல் கேள்விப்பட்ட திருப்புவனம் இன்ஸ்பெக்டர் ஓடிவந்து தமது சகாக்களை மீட்டுச் சென்றிருக்கிறார். நல்லவேளை போலீசை கட்டி வெச்சு உதைக்காம விட்டாங்க..!












Click it and Unblock the Notifications