For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராமேஸ்வரம், வேதாரணயம் மீனவர்கள் மீது சிங்கள கடற்படை அரிவாள் வெட்டு- வலைகள் நாசம்!

By Mathi
Google Oneindia Tamil News

நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே வெள்ளப்பள்ளத்திலிருந்து கடலுக்கு சென்ற மீனவர்களை இலங்கை கடற்படையினர் அரிவாளால் வெட்டி விரட்டியடித்துள்ளனர். ராமேஸ்வரம் மீனவர்களின் வலைகளை அறுத்தெறிந்துள்ளனர்.

வெள்ளப்பள்ளத்தில் இருந்து சுமார் 60 பைபர் படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். கச்சத்தீவு அருகே அவர்களை வழிமறித்த சிங்கள கடற்படையினர் அரிவாளால் தாக்கி விரட்டியடித்துள்ளனர். மேலும் மீனவர்களின் படகுகளை சேதப்படுத்திய கடற்படையினர், அவர்களின் மீன்களையும் பறித்துச் சென்றனர்.

இதையடுத்து 10 படகுகளில் இருந்த மீனவர்கள் கரைக்குத் திரும்பினர். மற்றவர்களும் கரைக்கு திரும்புவார்கள் என்று எதிர்பார்ப்பதாக அந்த மீனவர்கள் தெரிவித்தனர்.

இதேபோல் ராமேஸ்வரம் மீனவர்களது வலைகளையும் சிங்கள கடற்படையினர் அறுத்தெறிந்ததாக புகார் தெரிவித்துள்ளனர்.

English summary
Sri Lankan navy today allegedly forcibly took away the catch netted by fishermen who put to sea from here, while they were fishing near Katchatheevu in the Palk Straits, Fisheries Department officials said.Lankan naval personnel allegedly surrounded ten boats and at gunpoint seized the catch early this morning, officials said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X