வழக்கு.. சிறை.. எதற்கும் அஞ்ச மாட்டேன்: விஜயகாந்த்
கிருஷ்ணகிரி: ஆட்சியில் உள்ள குறைகளை கூறினால் என் மீது வழக்கு தொடுக்கப்படுகிறது. ஆனால் வழக்கு, சிறை எதற்கும் நான் அஞ்சமாட்டேன் என்று பேசியுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
கிருஷ்ணகிரியில் தேமுதிக நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. விஜயகாந்த் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில்,
தமிழகத்தில் கனிம வளங்கள் அதிகளவில் சுரண்டப்படுகின்றன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிகளவில் கனிம வளங்கள் உள்ளன. இந்தப் பகுதியில் கிரானைட் கல்கள் அதிகளவில் வெட்டியெடுக்கப்படுகின்றன.
இதில் முறைகேடுகளை தடுப்பதாகக் கூறி, அதிகாரிகள் நடத்தும் ஆய்வு பெயரளவுக்குதான் உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சர்க்கரை ஆலை தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகளாகியும் இதுவரை தொடங்கப்படவில்லை.
ஒசூர் பகுதியில் மின்வெட்டால் ஆயிரக்கணக்கான சிறு, குறு தொழில்சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன. தொடர் மின்வெட்டால் தொழிலாளிகள், ஆலை முதலாளிகள் என அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரியில் உள்ள மாங்கூழ் தொழிற்சாலைகளில் மின் தடையால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
தொலைநோக்கு திட்டத்தால் 2023-ல் தமிழகம் முன்னேறும் என்று தமிழக முதல்வர் கூறியுள்ளார். ஆனால், தற்போது குடிநீர், சாலை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றி பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
கிருஷ்ணகிரியில் புதை சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படவில்லை. சாலைகள் மிகவும் சீர்கெட்டுள்ளது.
ஆட்சியில் உள்ள குறைகளை கூறினால் என் மீது வழக்கு தொடுக்கப்படுகிறது. வழக்கு, சிறை எதற்கும் நான் அஞ்சமாட்டேன் என்றார் விஜயகாந்த். கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த்தும் கலந்து கொண்டார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications