தமிழக மீனவர்கள் மீது மீண்டும் சிங்கள கடற்படை வெறியாட்டம்
Subscribe to Oneindia Tamil

ராமேசுவரத்தில் இருந்து நேற்று காலை சுமார் 400க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 2 படகுகளில் ஏறினர். படகில் இருந்தவர்களை கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளனர். பின்னர் படகில் இருந்த வலைகளை அறுத்து கடலுக்குள் வீசியிருக்கின்றனர். மேலும் படகில் இருந்த பொருட்களையும் கடலுக்குள் தூக்கிப் போட்டு மிரட்டியுள்ளனர்.
இதனால் 2 படகுகளில் இருந்த மீனவர்கள் மீன்பிடிக்காமல் கரைக்குத் திரும்பிவிட்டனர். நேற்று முன்தினம்தான் 16 மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்ற நிலையில் மீண்டும் தாக்குதல் நடத்தியிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.












Click it and Unblock the Notifications