நெல்லையில் இன்று டெசோ மாநாட்டு தீர்மான விளக்க பொதுக் கூட்டம்: மு.க. ஸ்டாலின் உரை
நெல்லை: நெல்லையில் இன்று நடக்கும் டெசோ மாநாட்டு தீர்மான விளக்க பொதுக் கூட்டத்தில் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் பேசுகிறார். அவரை வரவேற்று திமுகவினர் நகர் முழுவதும் கொடிகள்,தோரணகள், வரவேற்பு வளைவுகள் அமைந்துள்ளனர்.
நெல்லையில் இன்று டெசோ மாநாட்டு தீர்மான விளக்க பொதுக் கூட்டம் நடக்கிறது. இதற்காக திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் சென்னையில் இருந்து நேற்றிரவு நெல்லை வந்தார். இரவு தாழையுத்து விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வெடுத்தார். இன்று காலை 9 மணிக்கு மகாராஜா நகர் வி.எம்.எஸ். மகாலில் மதுரை, தூத்துக்குடி மாநகர பகுதி இளைஞரணி நிர்வாகிகளிடம் அவர் நேர்காணல் நடத்தினார்.
இன்று மாலை 6 மணிக்கு பாளையங்கோட்டை மார்க்கெட் ஜவஹர் திடலில் டெசோ மாநாட்டு தீர்மான விளக்க பொதுக் கூட்டம் நடக்கிறது. பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ள வரும் ஸ்டாலினை வரவேற்று நெல்லை மாநகர் முழுவதும் கொடிகளும், தோரணங்களும், அலங்கார வளைவுகளும் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் நெல்லை பரபரப்பாக காணப்படுகிறது.












Click it and Unblock the Notifications