சர்தாரி வழக்கில் கால அவகாசம் கொடுத்தததால் பாகிஸாதான் பிரதமர் அஷ்ரப் பதவி தப்பியது!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி மீதான ஊழல் வழக்கை விசாரிக்க பிரதமர் ராஜா பர்வேஸ் அஷ்ரப்புக்கு அந்நாட்டு உச்சநீதிமன்றம் கால அவகாசம் கொடுத்திருக்கிறது.
பாகிஸ்தான் அதிபர் சர்தாரிக்கு எதிரான ஊழல் வழக்கை விசாரிக்க வேண்டும் என்று அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் பிரதமராக இருந்த கிலானி இதை நிராகத்திருந்தார். இதனால் அவர் நீதிமன்ற அவமதிப்பு குற்றத்துக்குள்ளாகி பதவி விலக நேரிட்டது.
கிலானியைத் தொடர்ந்து புதிய பிரதமராக ராஜா பர்வேஸ் அஷ்ரப் பொறுப்பேற்றார். சர்தாரி மீதான ஊழல் வழக்கை விசாரிக்க வேண்டும் என்று அஷ்ரப்புக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனாலும் அஷ்ரப் விசாரணையை நடத்த மறுத்துவிட்டார்.
இதனால் அவருக்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. இந்த வழக்கில் இன்று உச்சநீதிமன்றத்தில் அஷ்ரப் ஆஜரானார். அப்போது, உச்சநீதிமன்றத்தின் கண்ணியத்தை காப்பாற்றும் வகையில் இப்பிரச்சனைக்கு உரிய தீர்வு காணப்படும் என்றும் சர்தாரி மீதான வழக்கை விசாரிக்க கால அவகாசம் வேண்டும் என்றும் அவர் தரப்பில் கோரப்பட்டது.
இதில் கடுப்படைந்த நீதிபதி, சட்டத்தை மதிப்பதையெல்லாம் செயலில் காட்டுங்கள் என்று கூறி வழக்கை செப்டம்பர் 18-ந் தேதிக்கு ஒத்தி வைத்திருக்கிறார். இதனால் கிலானி வழியில் பறிபோகவிருந்த அஷ்ரப்பின் பதவி ஜஸ்ட் தப்பியிருக்கிறது!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications