சொத்து குவிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மனைவியுடன் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்

முன்னாள் தமிழக போக்குவரத்து துறை அமைச்சரும், திருச்சி மாவட்ட திமுக செயலாருமான கே.என்.நேருவின் மீது வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார், கே.என்.நேருவின் வீடு மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் திடீர் ரெய்டு நடத்தினர்.
இது தொடர்பாக கே.என்.நேரு மற்றும் அவரது மனைவி சாந்தாவின் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாரணை முடிந்து, திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.
எனவே இன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி, குற்றப்பத்திரிக்கையின் நகலை பெற்று கொள்ளுமாறு கே.என்.நேருவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. இதையடுத்து இன்று காலை 10.25 மணிக்கு கே.என்.நேரு, அவரது மனைவி சாந்தாவுடன் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
அப்போது கே.என்.நேருவின் வழக்கறிஞர் பதஞ்சலி பாபு நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி உள்ள எனது கட்சிக்காரரின் குற்றப்பத்திரிக்கை நகல் இன்னும் கிடைக்கவில்லை. பல்வேறு திருமண நிகழ்ச்சிகள் இருப்பதால், விசாரணையை வேறு தேதிக்கு மாற்ற வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
இந்த மனுவை ஏற்று கொண்ட நீதிபதி ஸ்ரீதர் விசாரணையை வரும் 26.9.2012ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications