யாழ்ப்பாணம் மஹா கணபதிப் பிள்ளையார் கோவிலில் தீ மிதி திருவிழா
Subscribe to Oneindia Tamil
யாழ்ப்பாணம்: இலங்கை யாழ்ப்பாணம் அருகே உள்ள கோண்டாவில் கந்தர்வளவு ஸ்ரீ மஹா கணபதிப் பிள்ளையார் கோவிலில் (காளி கோவில்) இன்று தீ மிதித் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
இலங்கையின் யாழ்ப்பாணம் நகரில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோண்டாவில் மேற்கு கந்தர்வளவு ஸ்ரீ மஹா கணபதிப்பிள்ளையார் (காளி கோவில்) ஆலயத்தில் இன்று தீ மிதிப்பு விழா நடைபெற்றுள்ளது.
கடந்த புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கிய மஹோற்சவ நிகழ்வு 8 ஆம் நாளான நேற்று தேர்த் திருவிழா நடைபெற்றது. தீர்த்தத் திருவிழாவான இன்று வெள்ளிக்கிழமை தீ மிதிப்பு நிகழ்வு இடம்பெற்றது.
பிள்ளையாரும் அம்மனும் தீர்த்தம் ஆடிவிட்டு வெளி வீதிவலம் வந்த பின்னர் தீ மிதிப்பு முற்பகல் 12 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உள்ளுர் மற்றும் புலம்பெயர்ந்து வாழ்ந்து வரும் 50-க்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்று கடவுளை வழிபட்டனர்.
தீ மிதிப்பு நிகழ்வு இலங்கையில் ஒரு சில ஆலயங்களில் மட்டுமே நடைபெற்று வருவது என்பது குறிப்பிடத்தக்கது.













Click it and Unblock the Notifications