Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

30 வயது சம்பாவுக்கு மிஸ்ட் கால் கொடுத்த 23 வயது பெரியசாமி.. கலசப்பாக்கத்தில் கலாட்டா!

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் கடலாடி பட்டியந்தல் என்ற கிராமத்தில் 30 வயது திருமணமான பெண்ணுக்கு மிஸ்ட் கால் கொடுத்தார் 23 வயது இளைஞர். இதையடுத்து அங்கு பெரும் கலாட்டா மூண்டு விட்டது.

முருகனின் மனைவிதான் அம்மு என்பவர். இவரது செல்போனுக்கு கடந்த சில வாரங்களாக 23 வயதான அதே பகுதியைச் சேர்ந்த பெரியசாமி என்பவர் அடிக்கடி ஆபாச எஸ்.எம்.எஸ் அனுப்புவதும், மிஸ்ட் கால் கொடுப்பதுமாக இருந்துள்ளார். மேலும் அவ்வப்போது அம்முவின் போனைத் தொடர்பு கொண்டு அசிங்கமாகவும் பேசி வந்துள்ளார்.

இதேபோல இளங்கோவன் என்பவரின் மனைவி சம்பாவுக்கும் இப்படிச் செய்து வந்துள்ளார். இதுகுறித்து சம்பா தனது கணவரிடம் கூறினார். இதையடுத்து கோபமடைந்த இளங்கோவன் பெரியசாமியைப் பிடித்து திட்டியுள்ளார். இதில் இருவருக்கும் இடையே மோதல் மூண்டது.

இந்த நிலையில் பெரியசாமிக்கு ஆதரவாக அவரது உறவினர்கள் விமலா, வைரம்மாள், கமலா, சரோஜா, சிவா உள்ளிட்டோர் திரண்டு வந்து இளங்கோவனைத் தாக்கி அடித்துள்ளனர். இதையடுத்து இளங்கோவன் தரப்பில் 2 பேர் ஓடி வந்து பெரியசாமி குரூப்பை தாக்கினர். இதனால் அந்தப் பகுதியே பரபரப்பானது.

தகவல் அறிந்து போலீஸார் விரைந்து வந்தனர். இளங்கோவனிடம் புகார் பெற்று பெரியசாமி உள்ளிட்ட நான்கு பேரையும், பெரியசாமி கொடுத்த புகாரின் பேரில் இளங்கோவன் உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+