ராயப்பேட்டை அரசு மருத்துவமனை துப்புரவு பணியாளர் சஸ்பெண்ட்-அமைச்சர் விஜய் அதிரடி
சென்னை: சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையின் ஆய்வின் போது சுகாதாரம் இன்றி சீர்கேடாக இருந்ததை கண்ட அமைச்சர் விஜய், மருத்துவமனை தலைமை துப்புரவு பணியாளரை சஸ்பெஸ்ட் செய்து உத்தரவிட்டார்.
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அரசு மருத்துவமனையில் குழந்தையின் முகம் எலியால் கடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் உள்ள சுகாதார வசதிகள் குறித்து அமைச்சர் விஜய் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக சென்னை அரசு பொது மருத்துவமனை மற்றும் எழும்பூர் மகப்பேறு மருத்துவமனைகளில் ஆய்வு நடத்தினார். அப்போது மருத்துவமனைகளில் சுகாதாரமின்றி இருந்ததை கண்ட அமைச்சர் சுகாதார அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். மேலும் பணி நேரத்தில் மருத்துவமனையில் இல்லாத டாக்டர் ஒருவருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
அப்போது பேசிய அமைச்சர் விஜய், முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின் பெயரில் சென்னையில் உள்ள மருத்துவமனைகளில் திடீர் ஆய்வு நடத்தி வருவதாகவும், இது குறித்த அறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த நிலையில் இன்று காலையில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அமைச்சர் விஜய் திடீர் ஆய்வு நடத்தினார். அப்போது மருத்துவ கல்வி இயக்குனர் வம்சதாரா, சுகாதார அதிகாரி பொற்கை பாண்டியன் ஆகியோர் அவருடன் இருந்தனர்.
மருத்துவமனையின் அனைத்து வார்டுகளையும் சுற்றி பார்த்த அமைச்சர், மருத்துவமனை சுகாதார சீர்கேடான நிலையில் இருப்பதை அறிந்தார். இதற்கு காரணமான மருத்துவமனை தலைமை துப்பரவு பணியாளர் திருமாலை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். மேலும் மருத்துவ பேராசிரியர் டாக்டர் ஜெயக்குமார், தலைமை நர்சு வசுந்தராதேவி ஆகியோருக்கு நோட்டீசு வழங்க உத்தரவிட்டார்.
ஆய்வுக்கு பிறகு அமைச்சர் விஜய் தலைமையிலான ஆலோசனை கூட்டம் மருத்துவமனையில் நடைபெற்றது. இதில் மருத்துமனையின் மூத்த டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மருத்துவமனையை தூய்மையாக வைப்பது, நோயாளிகளுக்கு தகுந்த சிகிச்சைகளை அளிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
-
பெண்களின் பாதுகாப்பிற்கு புதிய அரண்.. ஜூன் 9ல் சிங்கப்பெண் அதிரடி படையை களமிறக்கும் முதல்வர் விஜய்! -
"சுடுகாடு பக்கத்துல டாஸ்மாக் வையுங்க CM சார்!" – விஜய்யிடம் பார்த்திபனின் 'சைக்கலாஜிக்கல்' அஸ்திரம் -
கள்ளச்சாராயம் ஒழிக்க தனிப்படை.. கள்ளக்குறிச்சியில் விஜய் அரங்கேற்றும் மாற்றம்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
சல்லி சல்லியாய் நொறுங்கும் எடப்பாடி கனவு.. அதிமுக இனி அவ்வளவு தான்? தவெகவுக்கு தாவ தயாரான தலைகள்! -
கள்ளச் சாராயத்தை ஒழிக்க விஜய் போட்ட மெகா பிளான்.. நேரடியாக களத்தில் இறங்கிய ஆதவ் அர்ஜுனா! -
விஜய் தவெகவின் ‘வெற்றி டிவி’? டெல்லியில் டிரேடுமார்க் விண்ணப்பம்! களமிறக்கப்படும் பிரம்மாண்ட திட்டம் -
அதிமுக எம்எல்ஏக்கள் ரோட்டில் நிற்கிறார்கள் தெரியுமா? தவெகவை வெளுத்த டிடிவி தினகரன்! -
“திமுக கூட்டணிக் கட்சிகளிடம் கையேந்தி, கெஞ்சி ஆட்சி அமைத்துள்ளார் விஜய்”.. டிடிவி தினகரன் தாக்கு! -
காலம் எவ்ளோ வேகமாக சுத்துது! அன்று கடம்பூர் ராஜூவுக்காக விஜய் காத்திருந்தார்! இன்று அப்படியே உல்டா! -
ஆதவ் அர்ஜுனா சொன்னது நடக்குதா? ஈபிஎஸ் தலையில் இடிப்போல் இறங்கிய செய்தி.. அதிமுக எதிர்காலம்? -
வந்தே மாதரம் பாடல் விவகாரம்.. மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக வழக்கு தொடர ஐகோர்ட் அனுமதி!












Click it and Unblock the Notifications