நாட்டில் 40% கழிவறைகளை சுத்தப்படுத்துவது பன்றிகளும் நாய்களும் தான்!

மனிதக் கழிவுகளை மனிதனே நேரடியாக சுத்தம் செய்யும் அவலமான நிலையை தடை செய்யும் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வரவுள்ளது.
இது குறித்து சபாஸ் கரம்சாரி ஆந்தோலன் என்ற அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்,
2011ம் ஆண்டு மத்திய அரசின் சென்ஸஸ் விவரப்படி நாட்டில் 7.94 லட்சம் கழிப்பறைகளை மனிதர்கள் சுத்தம் செய்கிறார்கள்.
4.97 லட்சம் கழிப்பறைகளில் மனிதக் கழிவுகளை பன்றிகள், நாய்கள் உள்ளிட்ட விலங்குகள் சுத்தம் செய்கின்றன (சாப்பிடுகின்றன).
நாட்டில் உள்ள 24.6 கோடி வீடுகளில் 26 லட்சம் கழிப்பறைகள் கொஞ்சம் கூட சுத்தம் இல்லாதவை. 13.14 லட்சம் கழிப்பறைகளில் இருந்து வெளியேறும் மனிதக் கழிவுகள் நேரடியாக சாக்கடைகளில் கலக்கின்றன.
12.91 லட்சம் கழிப்பறைகளில் சேரும் மனிதக் கழிவுகளை 'சுத்தப்படுத்துவது' மிருகங்கள் தான்.
உத்தரப் பிரதேசத்தில் தான் நாட்டிலேயே மிக அதிக அளவாக 3.26 லட்சம் கழிப்பறைகள் உள்ள கழிவுகள் மனிதர்களால் அகற்றப்படுகின்றன. மேலும் இந்த மாநிலத்தில் சுமார் 80,000 கழிப்பறைகளில் சேரும் மனிதக் கழிவுகள் விலங்குகளால் மட்டுமே அகற்றப்படுகின்றன.
இந்த படு கேவலமான விஷயத்தில் மேற்கு வங்கம், ஒடிஸ்ஸா, பிகார், அஸ்ஸாம் மாநிலங்கள் அடுத்தடுத்த நிலையில் உள்ளன.
குஜராத்தில் விலங்குகளால் சுத்தப்ப்படுத்தப்படும் கழிப்பறைகள் எண்ணிக்கை, மனிதர்களால் சுத்தப்படுத்தப்படும் கழிப்பறைகளை விட அதிகம்.
ஆந்திராவில் 52,767 கழிப்பறைகளும், கர்நாடகத்தில் 28,995 கழிப்பறைகளும், தமிழகத்தில் 26,020 கழிப்பறைகளும் விலங்குகளால் சுத்தப்படுத்தப்படுகின்றன.
ஆந்திராவில் 10,357 கழிப்பறைகளிலும், கர்நாடகத்தில் 7,740 கழிப்பறைகளிலும், தமிழகத்தில் 27,659 கழிப்பறைகளிலும் மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் கொடூரம் நிலவுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications