நெல்லை மாவட்டத்தில் 15 பேருக்கு நல்லாசிரியர் விருது
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் 15 பேருக்கு மாநில அரசின் நல்லாசிரியர் விருதான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது கிடைத்துள்ளது.
முன்னாள் குடியரசுத் தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளான செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் பெயரில் விருந்து வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு விருது பெற தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களின் பட்டியலை கல்வித் துறை வெளியிட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் 15 பேர் மாநில அரசின் நல்லாசிரியர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
அவர்களின் விபரம் வருமாறு,
ஜேக்கப் அருள் மாணிக்கம், தலைமை ஆசிரியர், ஐசிஐ அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தென்காசி. தற்போது தென்காசி கல்வி மாவட்ட அலுவலராக பொறுப்பு வகிக்கிறார். வைகுண்டராமன் (தலைமை ஆசிரியர், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, பத்தமடை), மஜித் (தலைமை ஆசிரியர், ரஹ்மானியா மேல்நிலைப்பள்ளி, மேலப்பாளையம்), மரிய ஆல்பர்ட் (முதுநிலை ஆசிரியர், சவேரியர் மேல்நிலைப்பள்ளி, பாளை), பவர் சிங் (தலைமை
ஆசிரியர், புனித அன்னை மேல்நிலைப்பள்ளி, உவரி), இசக்கி (தமிழ் ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, வி,கே,புதூர்), ரேவதி (இடைநிலை ஆசிரியை, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, தேவர்குளம்), மேரி கிரேஸ் (இடைநிலை ஆசிரியை, இளையரசனேந்தல்), காந்திமதி (தலைமை ஆசிரியர், மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, குருதுடையார்புரம், நெல்லை), வீரபாண்டியன் (பட்டதாரி ஆசிரியர், புனித தெரசா, ஆர்சி நடுநிலைப்பள்ளி, புஷ்பவனம், வள்ளியூர் ஒன்றியம்), சாமுவேல் (தலைமை ஆசிரியர், எஸ்சி தொடக்கபள்ளி, கல்லிடைக்குறி்ச்சி), பொன்ராஜ் (தலைமை ஆசிரியர், டிடிடிஏ நடுநிலைப்பள்ளி, கிரைக்காரன்தட்டு, ராதாபுரம் தாலுகா), ஆமீனாள் (பட்டதாரி ஆசிரியை, எம்எம் நடுநிலைப்பள்ளி, விஸ்வநாதபுரம், விஸ்வநாதபுரம் சரகம்), செல்வசவுந்திரபாண்டியன் (தலைமை ஆசிரியர், இந்து நடுநிலைப்பள்ளி, சிவநாடானூர்), எட்வர்ட் தேவநாதன் (இடைநிலை ஆசிரியர், ஆர்சி தொடக்கப்பள்ளி, தென்காசி)
இவர்களுக்கு சென்னை சேத்துப்பட்டு எம்எம்சி மேல்நிலைப்பள்ளியில் இன்று மாலை 4 மணிக்கு நடக்கும் விழாவில் நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications