முரசொலி செல்வம் மீது முதல்வர் ஜெயலலிதா மேலும் ஒரு அவதூறு வழக்கு
சென்னை: முரசொலி நாளிதழின் பதிப்பாளர் செல்வம் மீது முதல்வர் ஜெயலலிதா சார்பில் மேலும் ஒரு அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இது குறித்து மாநகர அரசு வழக்கறிஞர் ஜெகன் சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது,
கடந்த 1ம் தேதி முரசொலி நாளிதழி்ல் வெளி வந்த செய்தியில் அதிமுக அரசை செயல்படச் சொல்வதற்கே ஒரு கண்டன ஆர்ப்பாட்டம் தேவைப்படுகிறது. தமிழகத்தின் எல்லையில் இருக்கும் கொடநாட்டில் இருந்து உண்ணாது உழைத்து உறங்காது விழித்து பொறுப்புகளை தவறாது புரிந்து வரும் ஆட்சி என்று அவர்களாக கூறிக் கொள்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த செய்தி தமிழக முதல்வரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. எனவே, முரசொலி பதிப்பாளர் செல்வம் மற்றும் செய்தியாளர் மூர்த்தி ஆகியோர் மீது அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
இந்த நிலையில், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், முரசொலி செல்வம் ஆகியோர் மீது முதல்வர் சார்பில் ஏற்கனவே தொடரப்பட்ட அவதூறு வழக்கு நேற்று முதன்மை செஷன்ஸ் நீதீமன்ற நீதிபதி கலையரசன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வழக்கறிஞர் ஜெகன், சிறப்பு அரசு வழக்கறிஞர் அசோகன் ஆகியோர் ஆஜராகி வாதாடினர். இந்த வழக்கு விசாரணை வரும் டிசம்பர் மாதம் 5ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications