தூத்துக்குடி அருகே ஜாமீனில் வெளியே வந்த பிரபல ரவுடி சதீ்ஷ்குமார் வெட்டிக்கொலை
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த பிரபல ரவுடி சதீஷ் குமார் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, சண்முகசிகாமணி நகரைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். அதிகாரி மாடசாமி. கடந்த ஜூலை மாதம் 24ம் தேதி இரவு மாடசாமி மற்றும் அவரது மனைவி சவுந்திரவல்லி ஆகியோரை கட்டிப் போட்டுவிட்டு பீரோவில் இருந்த 15.5 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.
இந்த வழக்கில் இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட பிரபல ரவுடி சதீ்ஷ் குமாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த ஆகஸ்ட் மாதம் 27ம் தேதி அவர் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார். அதில் இருந்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்திற்கு தினமும் சென்று கையெழுத்திட்டு வந்தார்.
வழக்கம்போல கையெழுத்துப் போட அவர் தனது பைக்கில் கப்பிகுளத்தில் இருந்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்திற்கு கிளம்பினார். அப்போது பின்னால் வந்த ஒரு அம்பாசிடர் கார் சதீஷ் குமார் பைக் மீது வேகமாக மோதியது. இதில் நிலை தடுமாறி அவர் கீழே விழுந்தபோது, காரிலிருந்து இறங்கிய மர்ம நபர்கள் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் அவர் அதே இடத்தில் பலியானார். அந்தக் காரை அப்படியே விட்டுவிட்டு மர்ம நபர்கள் தப்பிவிட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளை வலை வீசித் தேடி வருகின்றனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications