கருணாநிதியைத் தொடர்ந்து ஃபேஸ்புக், டுவிட்டருக்கு வரும் ஜெயலலிதா

Subscribe to Oneindia Tamil

Jayalalitha
சென்னை: சமூக வலைதளங்களான ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டரில் முதல்வர் ஜெயலலிதா விரைவில் இணையப்போவதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகின்றது.

தற்போதைய நவீன உலகில் சக்தி வாய்ந்த ஊடகமாகத் திகழ்வது தொலைக்காட்சி, இணையதளம், ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டர் போன்றவைகள் என்று கூறலாம். திரையுலகப் பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை பலர் டுவிட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் உள்ளனர். இந்த நிலையில் திமுக தலைவர் கருணாநிதி கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டரில் இணைந்தார். அவருக்கு பல திசைகளில் இருந்து வாழ்த்தும், எதிர்ப்பும் வந்து குவிந்தது.

இதையடுத்து அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா விரைவில் ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டரில் இணைய உள்ளார் என அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகின்றது.

இதற்காக அவர் நடித்த படங்கள், அவரது அரிய புகைப்படங்கள், அவர் விரும்பிப் படிக்கும் புத்தகங்கள், அரசியல் பயணம், தமிழக முதல்வராக அவர் பதவி வகித்தபோது செய்த சாதனைகள், அவரது எதிர்கால திட்டங்கள் மற்றும் லட்சியங்கள் என பல தகவல்கள் முக்கிய மூத்த அதிகாரிகள் வட்டாரத்தில் திரட்டப்பட்டு வருகின்றது என்று கூறப்படுகின்றது.

முதல்வர் ஜெயலலிதா எப்போதும் அதிரடிக்கு பெயர் பெற்றவர் என்பதால், ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டரிலும் ஏதாவது அதிரடி நிகழ்த்துவார் என அதிமுகவினர் மத்தியிலும், பத்திரிக்கையாளர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஆனால் இது குறித்து அதிமுக தரப்பிலோ அல்லது ஜெயலலிதா தரப்பிலோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் இதுவரை வெளியாகவில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+