சொத்துக் குவிப்பு வழக்கு... குடும்பத்தோடு வந்து குற்றப்பத்திரிக்கையை பெற்றார் பொன்முடி
விழுப்புரம்: சொத்துக் குவிப்பு மற்றும் நில அபகரிப்பு வழக்குகளில் இன்று விழுப்புரம் கோர்ட்டில், முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடியிடம் குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டது. அப்போது அவரது மனைவி விசாலாட்சியும் வந்திருந்து நகலைப் பெற்றுக் கொண்டார்.
வருவாய்க்கு மீறிய வகையில் சொத்து சேர்த்ததாகவும், நில அபகரிப்பில் ஈடுபட்டதாகவும் கூறி பொ்ன்முடி மீது புகார்கள் வந்ததைத் தொடர்ந்து, அவரது வீடு, மகன் வீடு, உறவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் சோதனை நடத்தினர். அதில் பல முக்கிய தஸ்தாவேஜுகள் சிக்கியதாக கூறப்பட்டது. இதையடுத்து பொன்முடியைக் கைது செய்தனர். பிறகு அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.
பொன்முடி மீது, 14.7.2012ம் ஆண்டு விழுப்புரம் கோர்ட்டில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அவருக்கும், அவரது மனைவிக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. இதையடுத்து பொன்முடியும், அவரது மனைவி விசாலாட்சியும், செப்டம்பர் 3ம் தேதி நேரில் ஆஜராகினர்.
பின்னர் வழக்கு இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி இன்று மாஜிஸ்திரேட் கயல்விழி முன்பு பொன்முடி தனது மனைவியுடன் ஆஜரானார். இதையடுத்து அவர்களுக்கு குற்றப்பத்திரிக்கை நகல்கள் வழங்கப்பட்டன.
இதையடுத்து வழக்கு செப்டம்பர் 24ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
-
“மின்வாரிய பதவி உயர்வு விவகாரத்தில் பொய்.. தவெக அரசின் பித்தலாட்டம்”.. பாய்ந்து வந்த திமுக! -
“கொளத்தூரை இழந்தது போல மொத்தத்தையும் இழக்கப்போவது உறுதி”.. ஸ்டாலினை குறி வைத்து தாக்கிய தவெக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
ஸ்டாலின் அதிரடி மாற்றம்.. இனி இவங்க யாருமே வேண்டாம்.. கொத்தாக தூக்கப்படும் பெரிய மீன்கள்! -
வைகோ வருத்தப்பட போறாரு.. நிர்வாகிகளை தட்டித் தூக்கும் திமுக! ஆர்டர் போட்ட ஸ்டாலின்! துரை தான் பாவம்! -
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
SC/ST நிதி வேறு துறைகளுக்கு மாற்றப்பட்டதா? அது வெறும் அவதூறு.. அமைச்சர் வன்னி அரசு விளக்கம்! -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம்












Click it and Unblock the Notifications