அழைக்கிறார் நரேந்திர மோடி.. தவிர்க்கிறார் ராகுல் காந்தி!

தனக்கு எதிராக ராகுல் காந்தியை காங்கிரஸ் களமிறக்க வேண்டும் என்பது மோடியின் ஆசை. இதன்மூலம் தனது தேசிய அளவில் அதிக முக்கியத்துவம் கிடைக்கும் என்பது அவரது பிளான். இது 2014ம் ஆண்டு நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தனது பிரதமர் கனவுக்கு உதவியாக இருக்கும் என்று நினைக்கிறார் மோடி.
ஆனால், அந்த வேலையை மட்டும் செய்துவிடவே கூடாது என்று மிக ஜாக்கிரதையாக உள்ளது காங்கிரஸ். தலைகீழாக நின்றாலும் குஜராத்தில் மோடியை தோற்கடிக்க முடியாது என்று நிச்சயமாக நம்பும் காங்கிரஸ், அந்த மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தல் களத்தில் ராகுல் காந்தியை இறக்கிவிட்டு முகத்தில் கரி பூசிக் கொள்ளத் தயாராக இல்லை.
ஏற்கனவே உத்தரப் பிரதேசத்தில் சமீபத்திய சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவுக்கு எதிராக களமிறங்கி நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டார் ராகுல் காந்தி. அங்காவது காங்கிரசுக்கு கொஞ்ச நஞ்சமாவது நம்பிக்கை இருந்தது.
ஆனால், குஜராத் முழுக்க முழுக்க தனிக்கதை. அங்கு நரேந்திர மோடி 3வது முறையாக முதல்வராவதைத் தடுக்க பெரிய சக்தி ஏதும் இல்லை. அவருடன் கட்சியில் இருந்து தனிக் கட்சி தொடங்கிவிட்ட முன்னாள் முதல்வர் கேசுபாய் படேல் தான் கொஞ்சமாவது ஓட்டைப் பிரித்து தங்களை கரையேற்ற வேண்டும் என்ற நிலையில் உள்ளது காங்கிரஸ்.
இதனால், நரேந்திர மோடி என்னதான் கேலி செய்தாலும், வம்புக்கு இழுத்தாலும் ராகுல் காந்தியை குஜராத் பிரச்சாரத்தில் முன் நிறுத்தி அசிங்கப்பட்டுவிடக் கூடாது என்று முடிவெடுத்துவிட்டது காங்கிரஸ்.
அந்த மாநிலத்தில் பிரச்சார வேலையை இரண்டாம் மட்டத் தலைவர்கள், மாநிலத் தலைவர்களிடம் விட்டுவிட்டு, சும்மா பேருக்காக சோனியா, ராகுல் காந்தி பிரச்சாரத்துக்குப் போய் வரப் போகிறார்கள் என்கிறார்கள்.
இதன்மூலம் குஜராத்தில் தோற்றாலும் அதற்கான பழி ராகுல் மீது விழாது. இது 2014ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பிலான பிரதமர் வேட்பாளராக ராகுலை களமிறக்க செளகரியமாக இருக்கும் என்று காங்கிரஸ் கருதுகிறது.
ஆனால், தன்னுடன் குஜராத்தில் நேரடியாக மோதி ராகுல் தோற்க வேண்டும், இது மக்களவைத் தேர்தலில் (பிரதமர் கனவில் இருப்பதால்) ராகுலை எதிர்த்து நிற்க உதவியாக இருக்கும் என்று மோடி கருதுகிறார்.
ஆனால், குஜராத்தில் சில தொகுதிகளில் தவிர ராகுல் காந்தி முழுக்க முழுக்க பிரச்சாரத்தில் இறங்கவே போவதில்லை என்கிறார்கள்.
இதுவல்லவோ பைட்!
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications