சென்னையில் 8 மாதங்களில் 962 பேர் விபத்தில் பலி.. ஹெல்மெட் அணியாததால் 436 பேர் பலி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னைக்கு தீவிரவாதிகள் அச்சுறுத்தல் எதுவும் இல்லை. சென்னை நகரில் தற்போது குற்றங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்று போலீஸ் கமிஷ்னர் திரிபாதி கூறினார்.

நிருபர்களிடம் பேசிய அவர், தனிப்படைகள் அமைக்கப்பட்டு நடத்திய அதிரடி வேட்டையில் 283 வழக்குகளில் தொடர்புடைய 262 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 1,378 சவரன் தங்க நகைகள், 18 கார்கள், 17 இரு சக்கர வாகனங்கள், 3 ஆட்டோக்கள், 79 செல்போன்கள், பணம் 16,85,750 ரூபாய் ஆகியவை மீட்கப்பட்டுள்ளன. இதன் மொத்த மதிப்பு ரூ.3.60 கோடி. இதில் 183 வழக்குகள் செயின் பறிப்புகள் ஆகும்.

கடந்த இரண்டு மாதங்களில் 239 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு இதுவரை 859 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையில் கடந்த ஆண்டு விபத்துக்களில் 1,456 பேர் பலியாகி உள்ளனர். இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் இதுவரை 962 பேர் விபத்தில் இறந்திருக்கிறார்கள். இதில் இரண்டு சக்கர வாகனத்தில் சென்று இறந்தவர்கள் 446 பேர். இவர்களில் ஹெல்மெட் அணியாமல் 436 பேர் பலியாகி இருக்கிறார்கள். இந்த வருடம் விபத்துக்கள் 9.5 சதவீதம் குறைந்துள்ளன.

சென்னைக்கு தீவிரவாதிகள் அச்சுறுத்தல் எதுவும் இல்லை. சென்னை நகரில் தற்போது குற்றங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+