வலைதளங்களில் பெண்கள் போட்டோவில் உலாவரும் தலிபான்கள்- நேட்டோ படையினருக்கு வார்னிங்
Subscribe to Oneindia Tamil
ஆப்கன்: ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள நேட்டோ படையினரது நடமாட்டங்களை அறிந்து கொள்வதற்காக இளம்பெண்கள் போட்டோக்களை பயன்படுத்தி போலியான பெயரில் தலிபான்கள் ஊடுருவியிருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் அழகிய இளம்பெண்களைப் போட்டு அக்கவுண்ட்டை பல தலிபான்கள் தொடங்கியிருக்கின்றனராம். இந்த அக்கவுண்ட்டுகள் மூலம் நேட்டோ படையினரைத் தொடர்பு கொண்டு அவர்களது இருப்பிடங்களை தலிபான்கள் அறிந்து கொள்கின்றனராம்.
இதனால் சமூக வலைதளங்களை எச்சரிக்கையோடு பயன்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
போலி அக்கவுண்ட்டை வைத்து என்னவெல்லாம் செய்ய முடியும் என்று நன்றாகவே யோசித்துள்ளனர் தலிபான்கள்!












Click it and Unblock the Notifications