உதயகுமார் போன்றோரின் ஏமாற்று பிரச்சாரங்களை நம்பி மக்கள் போராடுகின்றனர்: இல. கணேசன்
தூத்துக்குடி: உதயகுமார் போன்றோரின் ஏமாற்று பிரச்சாரங்களை நம்பி மக்கள் அணு உலையை எதிரித்து போராடி வருகின்றனர் என்று பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல. கணேசன் தனது குடும்பத்தாருடன் ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
உதயகுமார் போன்றவர்களின் ஏமாற்று பிரச்சாரங்களை நம்பி அங்குள்ள பொதுமக்கள் கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிராக போராடி வருகின்றனர். இத்திட்டம் பல ஆண்டுகளாக திட்டமிடப்பட்டு தற்போது மின் உற்பத்தியை தொடங்கும் தருவாயில் உள்ளது. தற்போதைய சூழ்நிலையில் மின் உற்பத்தி நாட்டுக்கு மிகவும் தேவையான ஒன்றாகும். இனி வரும் காலங்களில் நீரிலிருந்தோ அல்லது காற்றிலிருந்தோ மின் தேவையை பூர்த்தி செய்ய முடியாது.
அணு மின் உற்பத்தியில் மட்டுமே மின்தட்டுப்பாட்டை போக்க முடியும். ஆபத்து என்பது எந்த நிலையிலும் வரலாம். சிவகாசி பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டு பலர் இறந்தனர் என்பதற்காக அங்கு பட்டாசு தொழிற்சாலைகளோ, தீப்பெட்டி தொழிற்சாலைகளோ செயல்படாமல் இல்லை. பொதுமக்கள் அச்சத்தை போக்கும் வகையில் கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு வல்லுனர்கள் பலர் நேரடியாகச் சென்று ஆய்வு செய்து அது பாதுகாப்பானது என்று தெரிவித்தனர். அதன் பிறகும் போராட்டக்குழுவினர் பொதுமக்களை தவறாக வழிநடத்தி வருகின்றனர். இது கண்டிக்கத்தக்கதாகும். கூடங்குளம் அணு மின் நிலையத்தில் மின் உற்பத்தியை தொடங்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications