பேட்ஜ் குத்தும் சாக்கில் இளம்பெண்ணின் மார்பில் கைவைத்த எகிப்து அமைச்சர்

எகிப்து நாட்டு விளையாட்டுத் துறை அமைச்சர் இப்ராகிம் அகமது கலீல்(56) லண்டனில் நடந்த பாராலிம்பிக் போட்டியைக் காண சென்றார். அவர் லண்டனில் உள்ள நட்ச்ததிர ஹோட்டலில் தங்கி இருந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை பாராலிம்பிக் போட்டி நிறைவு நிகழ்ச்சிக்கு செல்ல ஹோட்டலுக்கு வெளியே வந்த அவர் அங்கு தனது தாய் மற்றும் தம்பியுடன் நின்று கொண்டிருந்த இளம்பெண் அருகே சென்றார். அந்த பெண்ணுக்கு எகிப்து தேசியக் கொடி பேட்ஜை குத்திவிடுவது போன்று அவரது மார்பில் கையை வைத்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் தாய்க்கு முத்தம் கொடுத்தார்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் கலீலை கைது செய்தனர். ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்ட அவர் கடந்த செவ்வாய்க்கிழமை அதாவது 2 நாள் போலீஸ் காவலுக்குப் பிறகு லண்டனில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அங்கு கலீல் கூறுகையில், நான் பேட்ஜை எங்கு குத்த என்று தான் கேட்டேன். நான் என்ன தவறு செய்தேன் என்றே புரியவில்லை. அதற்காக நான் மன்னிப்புகேட்க விரும்புகிறேன் என்றார். அவருக்கு நீதிபதி ரூ.14,293 அபராதம் விதித்தார். நீதிபதி அபராதம் வித்தவுடன் மூன்று குழந்தைகளின் தந்தையான கலீல் நீதிமன்றத்திலேயே அழுதுவி்ட்டார்.
பாராலிம்பிக் போட்டிகளில் எகிப்து தடகள வீரர்கள் 15 பதக்கங்கள் வாங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications