டீசல் விலை உயர்வுக்கு கண்டனம்- கேரளாவில் பந்த்- தமிழக பேருந்துகள் நிறுத்தம்
திருவனந்தபுரம்: மத்திய அரசின் டீசல் விலை உயர்வு முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் கூட்டணிக் கட்சிகள் முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளதால் மாநிலம் முழுவதும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம், கொச்சி, ஆலப்புழா, திருச்சூர் நகரங்களில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதுபோல கேரளா முழுவதும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளும் ஓடவில்லை. ஆட்டோ-டாக்சிகளும் ஓடவில்லை.
கொச்சி துறைமுகத்திலும் இன்று பணிகள் எதுவும் நடைபெறவில்லை. பெரும்பாலான ஊழியர்கள் பணிக்கு வராததால் அலுவலகங்கள் வெறிச்சோடி கிடந்தன. சரக்கு ஏற்றி இறக்கும் பணிகளும் பாதிக்கப்பட்டன. முழு அடைப்பு காரணமாக கேரளா அரசு இன்று பள்ளிகள்-கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்தது. இன்று நடைபெறுவதாக அரசு தேர்வாணைய தேர்வுகளும் பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டன.
கேரளாவில் நடைபெறும் முழு அடைப்பையொட்டி தமிழகத்தில் இருந்து செல்லும் பேருந்துகள் கேரளா எல்லை யுடன் நிறுத்தப்பட்டது. நாகர்கோவிலிலிருந்து திருவனந்தபுரம், கொல்லம், எர்ணாகுளம் ஊர்களுக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும் குமரி மாவட்ட எல்லையான களியக்காவிளையுடன் நிறுத்தப்பட்டது.
-
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications