கூடங்குளம் அணு உலையை மூடும் வரை போராட்டம் - திருமா

திருமாவளவனின் 50வது ஆண்டு விழா, அக்கட்சியின் மதுரை மாநகர், புறநகர் மாவட்டம் சார்பாக தமுக்கம் மைதானத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. விழாவில் திருமாவளவன் பேசியது:
இதுவரை 6 மாவட்டங்களில் நடந்த பொன்விழா நிகழ்ச்சிகள் மூலம் மொத்தம் எனக்கு 8 ஆயிரம் கிராமிற்கு மேல் தங்க பொற்காசுகள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த பொற்காசுகள் அனைத்தும் எனக்கோ, எனது குடும்பத்திற்கோ அல்ல. எல்லாம் நமது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குதான். இன்று அனைத்துக் கட்சிகளுக்கும் தொலைக்காட்சிகள் உள்ளன. ஆனால் நமது கட்சிக்கு தொலைக்காட்சி இல்லை.
இந்த குறையை போக்குவதற்கும், நமது கட்சியின் கொள்கைகளை மக்களுக்கு தெரிவிப்பதற்காகவும் புதிய தொலைக்காட்சி சேனல் ஒன்று தொடங்கப்பட உள்ளது. கூடங்குளம் போராட்டக்காரர்களை ஆரம்பத்தில் ஊக்குவித்த தமிழக அரசு, தற்போது அவர்களை எதிர்ப்பது ஏன் என்று தெரியவில்லை.
கூடங்குளம் அணு உலையை மூடும் வரை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போராடும். போலீசில் சரண் அடையும் அளவுக்கு உதயகுமார் எந்த குற்றமும் செய்யவில்லை.
பிற்படுத்தப்பட்டோரையும் சேர்த்துக் கொள்ளுங்கள்
பதவி உயர்வில் ஆதிதிராவிடர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் மசோதவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதற்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தர வேண்டும். பதவி உயர்வு இட ஒதுக்கீட்டில், இதர பிற்படுத்தப்பட்டோரையும் சேர்க்க வேண்டும் என்பதுதான் நமது நிலைப்பாடு. தற்போது கொண்டு வரப்பட்டுள்ள இந்த மசோதாவை நிறைவேற்றி விட்டு, அதன்பின் அதில் இதர பிற்படுத்தப்பட்டோரையும் சேர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
-
அண்ணாமலைக்கும் அடைக்கலம் தரும் திருமா.. வாழ்த்து சொன்ன கையோடு அடுத்து சொன்ன மேட்டரை பாருங்க -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications