வருடத்திற்கு மானிய விலையில் 9 சிலிண்டர்கள் அளிக்கும் டெல்லி முதல்வர்: அப்போ ஜெயலலிதா?

ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு 6 கேஸ் சிலிண்டர்கள் மட்டுமே மானிய விலையில் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு இல்லதரசிகளின் தலையில் இடியாக விழுந்துள்ளது. 6 சிலிண்டர் மட்டுமே மானிய விலையில் கிடைக்கும் என்றால் 6 மாதம் சாப்பிட்டுவி்டடு, 6 மாதம் பட்டினிக் கிடக்கச் சொல்கிறதா மத்திய அரசு என்று பெண்கள் குமுறுகின்றனர்.
சிலிண்டர் விலையைக் கேட்ட பல ஏழைக் குடும்பங்கள் இன்னும் அந்த அதிரிச்சியில் இருந்தே மீளவில்லை. இந்நிலையில் டெல்லியில் வாழும் ஏழைக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 9 சிலிண்டர்கள் மானிய விலையில் வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் ஷீலா தீக்சித் அறிவித்துள்ளார். இதன் மூலம் சுமார் 3.5 லட்சம் குடும்பங்கள் பயனடையும்.
இந்நிலையில் டெல்லி முதல்வரின் அறிவிப்பைக் கேட்ட தமிழக மக்கள் நம் முதல்வர் ஜெயலலிதாவும் இதுபோன்று ஒரு அறிவிப்பை வெளியிட்டு நம் வயிற்றில் பாலை வார்க்க மாட்டாரா என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications