இந்து மதத்தை இழிவுபடுத்தினாரா ஐஏஎஸ் அதிகாரி உமா சங்கர்?
சேலம்: இந்து மதத்தை இழிவுபடுத்தும் வகையில் ஐஏஎஸ் அதிகாரி உமாசங்கர் நடந்து கொண்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி சேலம் மாவட்டம் ஆத்தூரில் போலீஸில் புகார் தரப்பட்டுள்ளது.
ஆத்தூர் அண்ணா கலையரங்கில் செப்டம்பர் 15ம் தேதி கிறிஸ்தவ நிகழ்ச்சி ஒன்று நடந்தது. உலகத்துக்கு எதிர் வரும் ஆபத்தை காப்பதற்கான எழுப்புதல் என்ற பெயரில் நடந்த அந்த நிகழ்ச்சியில் கிறிஸ்தவ மதபோதகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதில் உமாசங்கர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், இந்த ஆண்டு, டிசம்பர் மாதம், உலகின் பெரும்பகுதி ஒரு அழிவை சந்திக்க உள்ளது. இதிலிருந்து நீங்கள் அனைவரும் தப்பிக்க வேண்டும்.
கிறிஸ்துவ மதத்தின் கருத்துகளை, பொதுமக்களிடம் எடுத்துரைக்க வேண்டும். கிறிஸ்துவர்கள் யாரும் ஜாதகம் பார்க்க கூடாது, உங்கள் வீட்டில் ஜாதகம் இருந்தால் உடனே தூக்கி தீயில் போட்டு கொளுத்துங்கள். அதுமட்டுமல்ல, ராகுகாலம் எமகண்டம் போன்ற தகவல்களை குறிப்பிட்டுள்ள காலண்டர்களையும் வீட்டிலிருந்து தூக்கி வீசுங்கள். ஆழத் தீயிட்டு கொளுத்துங்கள், குப்பைகளில் வீசியெறியுங்கள் என்று பேசியதாக தெரிகிறது.
இதற்கு பாஜக உள்ளிட்ட இந்து கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த நிலையில், இந்து மத நம்பிக்கைகளை இழிவுப்படுத்தி பேசிவரும், தமிழக அரசின் ஒழுங்கு ஆணைய கமிஷனர் உமாசங்கரை கைது செய்ய வேண்டும் என, வலியுறுத்தி, இந்து முன்னணி, சேலம் மாவட்ட தலைவர் செல்லமுத்து தலைமையிலான நிர்வாகிகள், நேற்று, ஆத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
மேலும் முதல்வர் ஜெயலலிதா, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர், கோவை மேற்கு மண்டல ஐஜி, சேலம் எஸ்பி உள்ளிட்டோருக்கும் புகார்களை அனுப்பியுள்ளனர்.
இதுதொடர்பாக விசாரணை நடந்து வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications