இஸ்லாமிய அமைப்பினர் போராட்டத்தை தமிழக அரசால் தீர்க்க முடியாமல் போனது ஏன்?– கருணாநிதி
சென்னை: சென்னை அண்ணாசாலையில் இஸ்லாமிய அமைப்பினர் 5 நாட்களாக நடத்தி வரும் போராட்டத்தை தமிழக அரசால் சுமூகமாக தீர்க்க முடியாமல் போனது ஏன் என்று திமுக தலைவர் மு.கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ளார்.
நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தும் அமெரிக்கத் திரைப்படத்தைக் கண்டித்து 24 முஸ்லிம் அமைப்புகள் செவ்வாய்க்கிழமையன்று அமெரிக்க துணைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டன. பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாரால் இதனைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த திடீர் போராட்டத்தினால் அண்ணாசாலையில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. வாகனங்கள் எரிக்கப்பட்டன. அரசுபேருந்துகள் உடைக்கப்பட்டன. இதனையடுத்து போலீஸ் தடியடி நடத்தியது. போலீஸாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு தடியடி நடைபெற்றதால், அந்தப் பகுதியே போர்க்களம்போல காட்சியளித்துள்ளது. இதனால் பதற்றம் ஏற்பட்டு, அண்ணாசாலையில் இருந்த கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன.
5 நாட்களாக தொடர் போராட்டம் நடந்துவரும் நிலையில், ஆர்ப்பாட்டம் நடத்துவோரின் பிரதிநிதிகளிடம் அரசு சார்பில் பேசப்பட்டது. ஆனாலும் பிரதிநிதிகளிடம் உறுதியளித்தவாறு சுமுகமாகத் தீர்க்க அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று கருணாநிதி தனது அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் இடிந்தகரை தேவாலயத்திற்குள் போலீஸ் அத்துமீறி நுழைந்ததை கண்டித்து கிறிஸ்துவ ஆயர் பேரவைத் தலைவர் ஏ.எம்.சின்னப்பா உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளார். இது குறித்து அரசு அவர்களை அழைத்துப் பேசியிருக்க வேண்டாமா என்றும் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
எங்களை மைனாரிட்டி அரசு என்றும் 356 பிரிவைப் பயன்படுத்தி கலைக்கவேண்டும் என்றும் அடிக்கடி கூறிவந்த ஜெயலலிதா,தனது ஆட்சிக்காலத்தில் மைனாரிட்டி மக்களின் மன உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் இருக்கிறார் என்றும் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.
-
அமைச்சர் ராஜ்மோகனுக்காக கருணாநிதி புகைப்படம் அகற்றமா? கொந்தளித்த வைரமுத்து.. என்ன நடந்தது? -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் வாசுதேவன் காலமானார்.. கடைசி வரை நிறைவேறாத ஆசை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications