அப்பாவை கண்டுபிடிச்சிட்டேன். ஆனா அவர் என்னோட கணவர்: அமெரிக்க பெண்ணின் சோகம்!
நியூயார்க்: தனது கணவரே தனது உண்மையான தந்தை என்று தெரிய வந்தால் உங்களுக்கு எப்படி இருக்கும்... அப்படி ஒரு அதிர்ச்சி அமெரிக்கப் பெண் ஒருவருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த அதிசய சம்பவம் ஒஹியோ மகாணத்தில் உள்ள டோலிஸ் டவுனில் நிகழ்ந்துள்ளது.
வெலரி ஸ்புரில் என்ற 60 வயதான பெண்ணிற்கு தன்னுடைய பிறப்பு குறித்த சந்தேகம் நீண்ட காலமாக இருந்து வந்தது. காரணம், அவருடைய குடும்பத்தார் குறித்து அவருக்குப் பெரும் குழப்பம் ஏற்பட்டதே. இந்த நிலையில் அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர், வெலரியிடம் சில உண்மைகளைக் கூறியுள்ளார். அது அவரை மேலும் குழப்பியது.
உனது தந்தை மற்றும் தாய் குறித்து சில மர்மங்கள் உள்ளன என்று அவர் கூறியது அவரை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதையடுத்து அவர் ரகசியமாக விசாரணையில் இறங்கியபோது பெரும் அதிர்ச்சிகள் காத்திருந்தன.
அது நாள் வரை அவர் யாரைத் தாய் என்று நினைத்திருந்தாரோ அவர் உண்மையான தாய் இல்லை, மாறாக, உறவினர் என்று அவர் கருதி வந்தவர்தான் உண்மையான தாய் ஆவார்.
அதேபோல அது நாள் வரை அவர் தந்தை என்று கருதி வந்தவர் உண்மையில் அவருடைய தாத்தா ஆவார். அதை விடக் கொடுமை, அத்தனை காலமாக அவர் குடும்பம் நடத்தி வந்த கணவர்தான் உண்மையான தந்தை ஆவார். இதை டிஎன்ஏ சோதனை மூலம் கண்டுபிடித்து உறுதி செய்துள்ளார் வெலரி.
வெலரியுடன் உடன் பிறந்தவர்கள் 6 சகோதரர்கள். 9 வயதாக இருக்கும் போது அவருடைய தாயார் இறந்துவிட்டார். இதன் பின்னர் சில ஆண்டுகள் கழித்து பெர்ஸி என்ற ட்ரக் டிரைவரை வெலரி திருமணம் செய்து கொண்டார். மிஸிஸிபியில் பிறந்த பெர்ஸி அக்ரான் என்ற ஊரில் டிரைவராக வேலை பார்த்த போது அவர்களுக்கு இடையே திருமணம் நடந்துள்ளது.
இருவருக்கும் இடையே வயது வித்தியாசம் அதிகம். 1998 ம் ஆண்டு நோய்வாய்ப்பட்டு தன்னுடைய 60 வயது வயதில் பெர்ஸி இறந்துவிட்டார். அதன் பிறகுதான் வெலரிக்கு குடும்பக் குழப்பம் உருவாகியுள்ளது.
தன்னுடைய தந்தை யாரென்ற சந்தேகத்துடன் இருந்த வெலரிக்கு திடீரென கணவர் பெர்ஸியின் மரபணுவை தன்னுடைய மரபணுவுடன் ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும் என்று தோன்றியது. பெர்ஸி இறப்பதற்கு முன் சீவிவிட்டு வைத்திருந்த முடியை எடுத்து மரபணு சோதனைக்கு உட்படுத்தினார். அப்பொழுதுதான் அந்த அதிர்ச்சிகரமான உண்மை தெரியவந்தது.
தன்னுடைய கணவர்தான் தகப்பனார் என்று தெரிந்து கொண்டார் வெலரி. தகப்பனார் யார் என்று தெரிந்து கொண்டதன் மூலம் நீண்டநாள் தேடலுக்கு விடை கிடைத்துள்ளது இதற்காக கடவுளுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் அந்தப் பெண்.
இதுகுறித்து அவர் கூறுகையில், குடும்பத்தின் வரலாறு, பின்னணி, யார் யாருடைய பிள்ளைகள் என்பது நமக்குத் தெரிய வேண்டும். அது அவசியம். அதை மறைக்கக் கூடாது. எனக்கு இப்போது உண்மை தெரிந்து விட்டது. இதனால் பெரும் பாரம் நீங்கியுள்ளது. என்னைப் போன்ற நிலையில் உள்ளவர்களுக்கு இது பெரும் பாடமாக அமையும்.
என்னால் இந்த அதிர்ச்சியைத் தாங்கும் வல்லமையை கடவுள் எனக்குக் கொடுத்துள்ளார் என்றார்.
கணவர் இறந்த பின்னர் அவர்தான் தன்னுடைய தகப்பனார் என்று தெரிந்து கொண்ட பெண்ணின் சோகத்தை எங்குபோய் சொல்வது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications