சென்னை ஐகோர்ட் நீதிபதி முருகேசன்- டெல்லி ஐகோர்ட் தலைமை நீதிபதியாக 26ம் தேதி பதவியேற்பு
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியான டி.முருகேசன், டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான பதவியேற்பு விழா வரும் 26ம் தேதி நடைபெற உள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பல ஆண்டுகளாக பணியாற்றி வருபவர் டி.முருகேசன். இவரை டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து மத்திய சட்டத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தேனி மாவட்டம், கம்பத்தை அடுத்த சி.புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் நீதிபதி டி.முருகேசன். சாதாரண விவசாய குடும்பத்தில் கடந்த 10.6.1951 அன்று பிறந்த அவர், கடந்த 1975ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வழக்கறிஞராக பதிவு செய்தார். அதன்பிறகு அரசு பிளீடராக பணியாற்றினார்.
கடந்த 2000ம் ஆண்டு மார்ச் மாதம் டி.முருகேசன், சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்பு 2001ம் ஆண்டு ஜுன் மாதம் உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக அவர் பதவி ஏற்றார். கடந்த 12 ஆண்டுகள் சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக பணியாற்றி உள்ளார்.
தலைமை நீதிபதியாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் நியமிக்கப்பட்டிருப்பதை அடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள அனைத்து அலுவலகங்களுக்கும் நீதிபதி டி.முருகேசன் நேரில் சென்று அங்குள்ள அலுவலர்களுக்கு தனது நன்றி தெரிவித்துக் கொண்டார்.
-
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்











Click it and Unblock the Notifications