நபிகள் நாயகத்தை தவறாக சித்தரித்த படத்தை எதிர்த்து போராட்டம்: நெல்லையில் பதட்டம்
நெல்லை: நபிகள் நாயகத்தை தவறாக சித்தரித்து எடுக்கப்பட்ட படத்தை கண்டித்து நெல்லையில் சாலை மறியலில் ஈடுபட முயன்றவர்களை, போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர். இதில் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள், போலீசார் மீது கற்களை வீசியதால் நெல்லையில் பதட்டம் ஏற்பட்டது.
இஸ்லாத்தையும், நபிகள் நாயகத்தையும் தவறாக சித்தரித்து எடுக்கப்பட்ட அமெரிக்க படத்துக்கு எதிராக நெல்லையில் தமமுகவினர் ரயில் மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை மாநகர துணை கமிஷனர் மயில்வாகணன் தலைமையிலான போலீசார் தடுக்க முயன்றனர். இதில் இருதரப்பினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் போலீசார் லேசான தடியடி நடத்தினர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலரை கைது செய்தனர்.
போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்தும், கைது செய்தவர்களை விடுதலை செய்ய கோரியும், இரவு 7.30 மணி அளவில் மேலப்பாளையம சந்தை முனையில், உம்மதே முஸ்லிம் அறக்கட்டளை நிறுவனர் காஜாநிஜாமுதீன் தலைமையில் இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது இரவு 9 மணி வரை நீடித்தது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், போலீசாரை திட்டியதோடு சாலை மறியலில் ஈடுபடவும் முயன்றனர்.
அதை கூடுதல் கமிஷனர் சேவியர் தலைமையிலான போலீசார் தடுத்தனர். மீண்டும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது போலீசார் மீது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சராமரியாக கற்களை வீசினர். இதையடுதது போலீசார் அவர்களை தடியடி நடத்தி விரட்டி அடித்தனர். ஆனால் மக்கள் ஓடுவதும், சிறிது நேரத்திற்கு பிறகும் மீண்டும் வந்து போலீசார் மீது கல்வீசுவதுமாக நள்ளிரவு வரை நீடித்தது. இதனால் அப்பகுதியில் பதட்டம் நீடித்தது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications