மகாத்மா காந்தி, நேரு ஆகியோரை குறித்து அறிந்து ஊக்கம் பெற்றேன்: ஆங் சான் சூகி

மியான்மர் நாட்டின் எதிர்கட்சி தலைவர் ஆங் சான் சூகி(67). இவர் சமாதானத்திற்கான நோபால் பரிசு பெற்றவர். அமெரிக்காவில் 17 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சூகி நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் இடையே உரையாற்றினார். அப்போது அவர் தனது வாழ்க்கையில் மகாத்மா காந்தி, நேரு ஆகியோரை முன்மாதிரியாக கொண்டிருப்பதாக தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
மகாத்மா காந்தி, தனி சிறப்பு வாய்ந்தவர். எனவே அவரை குறித்து நீங்கள் எல்லாரும் படித்து தெரிந்து கொள்ள வேண்டும். காந்தியை குறித்து நீங்கள் படிக்க படிக்க, அவரை யார் என்பதை அறிந்து கொள்ளலாம். மேலும் அவரது சிறப்பு தன்மைகளை அறிந்தால், நீங்கள் கவரப்படுவீர்கள்.
அகிம்சை முறை என்பது மகாத்மா காந்தி அறிமுகப்படுத்திய ஒரு வழி அல்ல. அவரும் அந்த கருத்தை வெளி உலகிற்கு வெளிப்படுத்தியவர்களில் ஒருவர். வன்முறை இல்லாமல் அகிம்சையின் மூலம் புரட்சிக்கரமான மாற்றங்களை கொண்டு வர முடியும் என்று அவர் நம்பினார்.
அதேபோல் இந்தியாவின் மற்றொரு தலைவர் ஜவாஹர்லால் நேருவும் எனக்கு முன்மாதிரி. நேருவுக்கு கிடைத்த கல்வியை போலவே எனக்கும் கிடைத்தது. காந்தி, நேரு ஆகியோரின் மூலம் எனது வாழ்க்கையில் ஊக்கம் பெற்றேன்.
நான் வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட போது, மார்டின் லூதர் கிங், எனது தந்தை ஆங் சன் ஆகியோரின் கருத்துகளை படித்து எனது வாழ்க்கையில் ஒழுக்கத்தை ஏற்படுத்தி கொண்டேன்.
கடந்த 1948ம் ஆண்டு பர்மாவிற்கு சுதந்திரம் கிடைத்த போது, மக்களுக்கு எல்லா உரிமைகளும் இருந்தது. ஆனால் கடந்த 1962ம் ஆண்டு ராணுவ ஆட்சி வந்த போது, மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டது. செய்தித்தாள்களில் சுதந்திரமான கருத்துகள் வெளியிடும் உரிமை மறுக்கப்பட்டது.
இதனால் மக்களின் மனதில் தோன்று கருத்துகளை வெளிப்படையாக கூற பயந்தனர். எனது குழந்தை பருவத்தில் இருந்து இது போன்ற சம்பவங்களை, நான் நேரடியாக பார்த்து வந்தேன் என்றார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications