மகன் திருமணத்திற்கு கிடைத்த அன்பளிப்பு, மொய்யை ஆதரவற்றோருக்கு கொடுத்த தந்தை
தர்மபுரி: தர்மபுரியில் வசிக்கும் நாகராஜன் என்பவர் தனது மகனின் திருமண மொய்பணத்தை ஆதரவற்ற குழந்தைகளுக்கு வழங்கினார்.
தர்மபுரி நகரில் உள்ள அப்பாவு நகரைச் சேர்நதவர் நாகராஜன் (66). ஒரு சிறிய தீப்பெட்டி தொழிற்சாலை வைத்து நடத்தி வருகிறார். மேலும் மாவட்ட கண்தான மைய துணைத் தலைவராகவும் உள்ளார். மாதாமாதம் கிடைக்கும் வருமானத்தில் ஒரு பகுதியை ஆதரவற்றவர்களுக்கு வழங்கி வருகிறார். இந்நிலையில் அவரது மகன் ஜெகநாதனுக்கும், மஞ்சுபிரியா என்ற பெண்ணுக்கு கடந்த 12ம் தேதி கோவையல் திருமணம் நடந்தது. இதையடுத்து திருமண வரவேற்பு நேற்று முன்தினம் தர்மபுரியில் நடந்தது.
இதற்காக உறவினர்கள், நண்பர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்த அவர் அதில் தெளிவாக அன்பளிப்பைத் தவிர்க்கவும், அவ்வாறு தவிர்க்க முடியாதவர்கள் சேவைக்ககாக அன்பளிப்பு வழங்கலாம் என்றும், மண்டபத்தில் ஒரு பெட்டி வைக்கப்படும் அதில் அன்பளிப்புகளை போடலாம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து நேற்று முன்தினம் மாலை வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் மேடைக்கு அருகே சேவைக்காக வைக்கப்பட்டிருந்த 2 பெரிய பெட்டிகளில் தாங்கள் வழங்க விரும்பிய தொகையை போட்டனர். நிகழ்ச்சி முடிவில் பேசிய நாகராஜன், இந்த பெட்டிகளில் சேர்ந்துள்ள பணம் அனைத்தும் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஆதரவற்ற இல்லங்களுக்கு பிரித்துக் கொடுக்கப்படும். இத்துடன் சேர்த்து மணமக்களுக்கு வந்த அன்பளிப்புகளும் கொடுக்கப்படும் என்று அறிவித்தார்.












Click it and Unblock the Notifications