இந்தியாவின் அதிக எடை கொண்ட ஜிசாட்-10 செயற்கைக் கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது!

இந்திய விண்வெளி ஆய்வு வரலாற்றில் முதல் முறையாக 3,400 கிலோ எடை கொண்டதாக ஜிசாட் 10 செயற்கைக் கோள் உருவாக்கப்பட்டது. இந்த செயற்கைக் கோள் கடந்த 22-ந் தேதி ஏவ முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் ராக்கெட்டின் மேல்பகுதியில் தூசி இருந்ததால் விண்ணில் ஏவுதல் தடைபட்டது. இந்நிலையில் இன்று காலை ஜிசாட்-10 செயற்கைக் கோள் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. செயற்கை கோள் வெற்றிகரமாக அதன் சுற்றுப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
ஜிசாட்-10 செயற்கைகோள் சுமார் 15 ஆண்டுகள் பணியாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நவம்பர் மாதம் முதல் இது இந்திய தொலை தொடர்பு துறையில் முக்கிய பங்கு வகிக்கும். தகவல் தொலை தொடர்பு, தொலைக்காட்சிகளுக்கான டி.டி.எச். மற்றும் வானொலி சேவைகளில் ஜிசாட் செயற்கை கோள் அதிநவீன சேவைகளை வழங்கும்.
ஜிசாட்-10 செயற்கை கோளில் 30 டிரான்ஸ்பான்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில் 12-கியூ-பான்ட், 12சி-பான்ட், 6 விரிவுபடுத்தப்பட்ட சி-பான்ட் டிரான்ஸ்பான்டர்களாகும். ஜிசாட்-10ல் ககன் எனும் நவீன சிக்னல் கருவியும் இடம் பெற்றுள்ளது. இநத கருவி மேம்படுத்தப்பட்ட துல்லியமான ஜி.பி.எஸ். சிக்னல்களை தரக்கூடிய ஆற்றல் கொண்டது. விமான சேவையை நிர்வகிக்க, இந்திய விமான நிலையங்களுக்கு இந்த சிக்னல் தகவல்கள் பயன் உள்ளதாக இருக்கும்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications