மதுவிலக்கு அமல்படுத்த மதிமுக உண்ணாவிரதம்: மறைமலைநகரில் வைகோ பங்கேற்பு
சென்னை: தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி, காந்தி ஜெயந்தி தினமான இன்று மதிமுக சார்பாக உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் மறைமலைநகரில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் மதிமுக பொது செயலாளர் வைகோ கலந்து கொண்டார்.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி காந்தி ஜெயந்தி தினமாக இன்று தமிழகத்தின் முக்கிய நகரங்களில் மதிமுக சார்பாக உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று மதிமுக தலைமை கழகம் அறிக்கை வெளியிட்டிருந்தது.
பூரண மதுவிலக்கை தமிழகத்தில் நிலைநாட்டுவதற்கான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்கு மதிமுக திட்டமிட்டுள்ளது. அதன்படி பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி மகாத்மா காந்தி பிறந்த நாளான இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் மதிமுக உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளது என்று மதிமுக அறிக்கை வெளியிட்டிருந்தது.
இதன்படி, பூரண மதுவிலக்கு அமல்படுத்த கோரி தமிழகம் முழுவதும் மதிமுக சார்பில் இன்று உண்ணாவிரதம் நடைபெற்று வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டம் மறைமலை நகர் நகராட்சி திடலில் காலை 9 மணிக்கு உண்ணாவிரதத்தை அவைத்தலைவர் துரைசாமி துவங்கி வைத்தார். இதில் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டார்.
மதிமுக மாநில துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா, மாவட்ட செயலாளர் பாலவாக்கம் சோமு, மாவட்ட துணை செயலாளர் சிங்கை ஆனந்தன், நகர செயலாளர்கள் ரவி, சதீஷ்பாபு, ஒன்றிய செயலாளர் காசி மற்றும் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இன்று மாலை 5 மணி வரை முடிவடையும் உண்ணாவிரதத்தை கட்சி பொருளாளர் மாசிலாமணி முடித்து வைக்க உள்ளார். உண்ணாவிரதத்தில் பங்கேற்க காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான கட்சி தொண்டர்கள் வந்துள்ளனர். செங்கல்பட்டு டிஎஸ்பி தணிகைவேல் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications